ஜி வி பிரகாஷ்குமார் தமிழ் சினிமாவில் பணியாற்றும் இசையமைப்பாளர், பின்னணி பாடகர், திரைப்பட தயாரிப்பாளர், மற்றும் நடிகர் ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றுகிறார். இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் மூத்த சகோதரியான ஏ ஆர் ரிஹானாவின் மகன்தான் ஜிவி பிரகாஷ். 2006 ஆம் ஆண்டு வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஜி வி பிரகாஷ்.
தொடர்ந்து கிரீடம், சேவல், அங்காடித்தெரு, ஆயிரத்தில் ஒருவன், ஆடுகளம், மயக்கம் என்ன, முப்பொழுதும் உன் கற்பனைகள், தாண்டவம், அசுரன் போன்ற பல வெற்றி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஜி வி பிரகாஷ். டார்லிங் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் ஜி வி பிரகாஷ். தொடர்ந்தது திரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில், பேச்சிலர், கிங்ஸ்டன் போன்ற பல நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்துள்ளார் ஜி வி பிரகாஷ்.
தற்போது நடிகராகவும் இசையமைப்பாளராகவும் தமிழ் சினிமாவில் பிஸியாக இருந்து வருகிறார் ஜி வி பிரகாஷ். சூர்யாவின் 46வது திரைப்படமான வாடிவாசல் திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணலில் அந்த திரைப்படத்தை பற்றி பகிர்ந்திருக்கிறார்.
ஜி வி பிரகாஷ் கூறியது என்னவென்றால், நானும் வெற்றிமாறனும் இணைந்து படம் பண்ணுகிறோம் என்றால் அந்த படத்தில் பேக்ரவுண்ட் மியூசிக்கில் ஒரு டிரம்பட் வரும். ஆனால் வாடிவாசல் படத்தில் டிம்பெட் இல்லாமல் பேக்ரவுண்ட் வாய்ஸுக்கு ஹியூமன் வாய்ஸ் வைத்து உருவாக்கலாம் என்று முடிவு செய்து வைத்திருக்கிறேன். அதற்கு வெற்றிமாறன் ஓகே சொன்னால் அப்படியே நடக்கும் என்று பகிர்ந்திருக்கிறார் ஜி வி பிரகாஷ்.