விமானத்தில் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் என மொத்தம் 242 பேர் (230 பயணிகள், 12 பணியாளர்கள்) பயணம் செய்ததாகவும், அவர்களது நிலை என்ன என்பது குறித்து இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. விபத்து குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத் முதல்வரிடம் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று உறுதி அளித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தில் சில பிரபலங்கள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி பயணம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்த தகவலை இன்னும் குஜராத் மாநில அரசோ அல்லது விஜய் ரூபாணியின் குடும்பத்தினரோ அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விமான விபத்து, ஏர் இந்தியா, அகமதாபாத், லண்டன், விஜய் ரூபாணி, முன்னாள் முதல்வர், குஜராத், பயணிகள், மீட்புப் பணி, Plane Crash, Air India, Ahmedabad, London, Vijay Rupani, Former CM, Gujarat, Passengers, Rescue Operation, Breaking News