ஒரு படத்திற்கு தான் அனுமதி.. பெற்றோர் போட்ட கண்டிஷன்… ஆனால் அனுஷ்கா வாழ்வில் ஏற்பட்ட மாற்றம்…!!

Published:

நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தாலும் அவரது பெற்றோர் முதலில் அவரை நடிப்பதற்கு அனுமதிக்கவில்லை. அப்போது நாகார்ஜுன் மிகவும் விரும்பி கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்க ஒப்புக்கொண்டார்கள். ஆனால் அனுஷ்காவால் திரையுலகையை விட்டு வெளியே வர முடியாத அளவில் அவர் பிஸி ஆனார்.

நடிகை அனுஷ்கா பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவுடன் யோகா டீச்சராக மாறினார். அவரது யோகா பள்ளியில் பல அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் வருகை தந்து யோகா கற்றுக்கொள்வார்கள். அந்த வகையில் யோகா பள்ளிக்கு வந்து யோகா கற்றுக் கொண்டவர்களில் ஒருவர் தான் நடிகர் நாகார்ஜுன்.

அப்போதுதான் அனுஷ்காவிடம் “சினிமாவில் நடிக்க உங்களுக்கு விருப்பமா? நான் உங்களுக்கு வாய்ப்பு வாங்கி தருகிறேன்” என்று நாகார்ஜுன் கேட்டிருக்கிறார். அவர் கண்டிப்பாக எனக்கு விருப்பமில்லை என் வீட்டிலும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் எனக்கு இந்த யோகா வாழ்க்கை திருப்தியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

விபத்தில் கால் இழந்தாலும் நடனக்கலையில் சாதனை.. திரையுலகிலும் சாதனை செய்த நடிகை..!

happy birthday anushka shetty from archery to dialogues devasena left a lasting impression on all in the baahubali movies 001

ஆனாலும் நாகார்ஜூனன் தனது முயற்சியை கைவிடாமல் அனுஷ்காவின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தான் தயாரித்து நடிக்கும் சூப்பர் என்ற திரைப்படத்தில் உள்ள நாயகி கேரக்டருக்கு அனுஷ்கா தான் பொருத்தமாக இருப்பார் எனவே அவரை நடிக்க அனுமதியுங்கள் என்றும் கேட்டுள்ளார்.

இதனை அடுத்து அனுஷ்காவின் பெற்றோர்கள் இந்த ஒரு படத்தில் மட்டும் நடிக்க அனுமதி அளித்தனர். அந்த படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியானது. தெலுங்குத் திரையுலகின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அந்த படம் அமைந்தது. இதனை அடுத்து தெலுங்கு திரையுலகில் உள்ள பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அனுஷ்காவின் வீட்டிற்கு படையெடுத்தார்கள்.

ஒரு கட்டத்தில் அனுஷ்காவின் பெற்றோர் மறுக்க முடியாத நிலையில் தொடர்ந்து நடிக்க ஒப்புக்கொண்டனர். அதன் பிறகு தான் அவர் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக மாறினார். தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களான ரவி தேஜா, சிரஞ்சீவி, நாகார்ஜுனா, விஷ்ணு மஞ்சு என தொடர்ச்சியாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

அவர் நடித்த பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகி வசூலை வாரி குவித்தது. இந்த நிலையில் தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் உருவான ரெண்டு என்ற படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றாலும் அதன் பிறகு அவர் தமிழில் மீண்டும் நடிப்பதற்கு பல வருடங்கள் ஆனது.

ரஜினி, சிவாஜி என முன்னணி நடிகர்களுடன் 16 படம், மலையாளத்தில் 116 படங்கள் நடித்த கீர்த்தி சுரேஷ் அம்மா.. இவ்வளவு பெரிய நடிகையா?

anushka-shetty

அனுஷ்காவுக்கு இந்திய அளவில் புகழை கொடுத்த படம் என்றால் அது அருந்ததி தான். கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் பெரிய ஹீரோக்கள் யாருமே இல்லாமல் அனுஷ்காவின் கேரக்டரை சுற்றியே கதை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த படம் தமிழ் உள்பட பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியான நிலையில் அகில இந்திய ஸ்டாராக அனுஷ்கா மாறினார்.

அருந்ததி படத்திற்கு அடுத்த படம் தான் பில்லா. தமிழில் அஜித்தின் அடுத்த பில்லா படத்தை அப்படியே ரீமேக் செய்து தெலுங்கில் வெளியிட்டனர். பிரபாஸ் நடித்த இந்த படத்தில் அனுஷ்கா மற்றும் நமிதா நடித்தனர். இந்த படம் வசூலை வாரி குவித்தது. இதனை அடுத்து தமிழில் விஜய்க்கு ஜோடியாக வேட்டைக்காரன், சூர்யா ஜோடியாக சிங்கம் உட்பட பல படங்களில் அவர் நடித்தார். தமிழ் தெலுங்கு என மாறி மாறி நடித்த படங்கள் சிறப்பான வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் அனுஷ்காவின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்தாலும் பல படங்களில் கமிட் ஆகி விட்டதால் அவர் திருமணத்திற்கு உடனடியாக ஒப்புக்கொள்ளவில்லை. இந்த நிலையில் தான் அவர் அஜித்துடன் என்னை அறிந்தால் எஸ்.எஸ். ராஜமவுலியின் பாகுபலி உள்பட பல வெற்றி படங்களில் நடித்தார்.

பாகுபலி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் அவர் இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் நடித்தார். இந்த படத்திற்காக அவர் உடல் எடையை அதிகரிக்க வேண்டிய நிலை வந்ததால் 10 கிலோவிற்கு மேல் உடல் எடை அதிகரித்து நடித்தார். ஆனால் இந்த படத்திற்கு பின்னர் அவரால் மீண்டும் உடல் எடையை குறைக்க முடியவில்லை என்பதுதான் சோகமான உண்மை. ஒரு யோகா டீச்சராக இருந்தும் அவரால் ஏற்றிய உடல் எடையை குறைக்க முடியவில்லை.

ரஜினியுடன் நடிக்க மறுத்து.. பின்பு ஒரு கண்டிஷன் போட்டு நடித்த முன்னணி நடிகை!

இதனை அடுத்து தான் அவருக்கு இறங்குமுகம் ஆனது. பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் அவர் நடித்தாலும் அவர் கிட்டத்தட்ட திரையுலகை விட்டு விலகி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். 41 வயது ஆகியும் இன்னும் அவருக்கு திருமணம் ஆகவில்லை என்பதும் பிரபாஸ் மற்றும் ஆர்யாவுடன் காதல் என்று கிசுகிசுக்கப் பட்டாலும் இன்று வரை அவர் திருமணம் செய்யாமல் உள்ளார்.

மேலும் உங்களுக்காக...