64 வயதில் ஆரம்பித்த திரை வாழ்க்கை… பாட்டு என்றாலும் இவங்கதான்.. பாட்டி என்றாலும் இவங்கதான்.. ஆர் சுப்புலட்சுமி திரைப்பயணம்!

By Bala Siva

Published:

பிரபல மலையாள மற்றும் தமிழ் நடிகை ஆர்.சுப்பலட்சுமி காலமான நிலையில் அவர் நடித்த தமிழ் படங்கள் மற்றும்  பிற மொழி படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

மலையாள நடிகை ஆர் சுப்பலட்சுமி கேரள மாநிலத்தில் கடந்த 1936 ஆம் ஆண்டு பிறந்தார். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இவர் சிறு வயதிலேயே கர்நாடக இசை மற்றும்  நடனம் நாட்டியம் ஆகியவற்றை முறையாக கற்றுக் கொண்டார்.

2002 இல் நந்தனம் என்ற படத்தின் மூலமாக மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமான இவர் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். நந்தனம்  திரைப்படத்தில் நடித்த போது ஆர்.சுப்பலட்சுமி அவர்களுக்கு வயது 64.

அதன் பிறகு மலையாளத்தில் பல திரைப்படங்களில்  பாட்டி வேடங்களில் நடித்தார்.  ஒரு கட்டத்தில் மலையாள திரையுலகில் பாட்டி வேடம் என்றாலே ஆர்.சுப்பலட்சுமி  தான் என்று பல இயக்குனர்கள் முடிவு செய்து அவரையே அழைத்தனர்.

6 மொழிகள், 2000 படங்கள்… நடிகைகளின் அசர வைக்கும் குரலுக்கு சொந்தக்காரர் இவர்தான்!

திரை உலகில் நடிக்க வருவதற்கு முன்பு இசை கலைஞராக இருந்த ஆர் சுப்புலட்சுமி அவர்கள் ஆல் இந்தியா ரேடியோவில் பல நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்துள்ளார் அதோடு இவருக்கு தென்னிந்தியாவின் முதல் ஆல் இந்தியா ரேடியோவின் பெண் இசையமைப்பாளர் என்ற பெருமையும் உண்டு.

R Subbalakshmi

அது மட்டும் இன்றி இவரது இசை கச்சேரி கேரள மாநிலத்தில் வெகு பிரபலம். ஆர்.சுப்பலட்சுமி, கல்யாண கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உண்டு. இவரது இளைய மகள் தாரா கல்யாண் என்பவர் மலையாளத்தில் பிரபல நடிகை.

சுப்புலட்சுமி மலையாள படங்களில் மட்டுமின்றி தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்தவர் மூன்று ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். மேலும் ஒரு ஆங்கில படத்திலும் நடித்துள்ளார்.

தமிழில்  ஒரு பொண்ணு ஒரு பையன் என்ற திரைப்படத்தில் தான் இவர் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு  கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான சேரன் நடித்த ராமன் தேடிய சீதை என்ற படத்தில்  முக்கிய வேடத்தில் நடித்தார்.

இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்த படம் என்றால் அது விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படம் தான். சிம்பு, த்ரிஷா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாக்கிய இந்த படத்தில் ஆர் சுப்புலட்சுமி த்ரிஷாவின் பாட்டியாக நடித்திருப்பார். அந்த கேரக்டர் அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்றுக் கொடுத்தது.

தமிழ் சினிமால ஒரு ரவுண்டு வந்துருக்க வேண்டியவங்க.. 24 வயதில் பிரபல நடிகைக்கு நேர்ந்த துயரம்!

இந்த படத்தின் வெற்றியை அடுத்து ஒரே ஒரு ராஜா மொக்க ராஜா என்ற படத்திலும் பாட்டி வேடத்தில் நடித்தார். இந்த நிலையில் பிரபல இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ’அம்மணி’ என்ற படத்தில் டைட்டில் கேரக்டரில் நடித்தார். இவரது கேரக்டரை சுற்றி தான் இந்த படத்தின் கதையே அமைந்திருக்கும்.

R subbalakshmi1

இதனை அடுத்து மீண்டும் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ஹவுஸ் ஓனர் என்ற திரைப்படத்தில் ஸ்ரீரஞ்சனியின் பாட்டியாக நடித்திருப்பார். இந்த படத்திலும் அவரது நடிப்பு  அபாரமாக இருக்கும். அடுத்து நெல்சன் இயக்கத்தில்  விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் மாலில் சிக்கிக் கொள்ளும் பணயக்கைதிகளில்  ஒருவராக நடித்திருப்பார். காமெடி கேரக்டரில் அந்த படத்தில் கலக்கி இருப்பார்.

தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடித்த இவர் ஒரே ஒரு சமஸ்கிருத திரைப்படத்திலும் நடித்திருந்தார். மேலும் டப்பிங் கலைஞராகவும் இவர் சில படங்களில் பணிபுரிந்துள்ளார். மேலும் இவர் திரைப்படங்களில் சில பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக அம்மணி திரைப்படத்தில் இடம்பெற்ற மழை இங்கு இல்லையே என்ற பாடல் மனதை உருக வைக்கும்.

திரைப்படங்களில் மட்டுமின்றி இவர் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். மலையாளத்தில்  கிட்டத்தட்ட 30 சீரியல்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழில் பேரழகி மற்றும் பாரதிதாசன் காலனி ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார்.

மேலும் தொலைக்காட்சி மற்றும் ரேடியோவின் ரியாலிட்டி ஷோக்களிலும் இவர் கலந்து கொண்டுள்ளார்.  அதுமட்டுமின்றி கிட்டத்தட்ட 65 விளம்பர படங்களில் நடித்துள்ளார். லேஸ், ஹார்லிக்ஸ், கல்யாண் ஜுவல்லர்ஸ் உட்பட பல முக்கிய விளம்பரங்களில் இவர் தோன்றியுள்ளார்.

கால் மேல் கால் போட்டு அமர்ந்த நடிகை.. NO சொன்ன MGR!!.. ஆனாலும் அவங்க டாப் ஹீரோயனானது எப்படி?

மேலும் இவர் தனி ஆல்பமும் இசையமைத்து பாடியுள்ளார். நடிகை, பாடகி, இசையமைப்பாளர்,  சீரியல் நடிகை, டப்பிங் கலைஞர், என பல்வேறு அவதாரங்களில் ஜொலித்த ஆர்.சுப்பலட்சுமி மறைந்துள்ளது ஒட்டுமொத்த திரைய உலகிற்கே பெரும் இழப்பாகும். அவரது ஆத்மா சாந்தி அடைய நான் பிரார்த்தனை செய்வோம்.