6 மொழிகள், 2000 படங்கள்… நடிகைகளின் அசர வைக்கும் குரலுக்கு சொந்தக்காரர் இவர்தான்!

சினிமாவில் நடிகர், நடிகைகளை தூக்கிக் கொண்டாடும் நாம் பின்னணியில் இருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களைக் கண்டு கொள்வதில்லை. ஒவ்வொரு நடிகர், நடிகைகளின் புகழுக்கும் பின்னால் அவர்களுடன் பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் ஏராளம். அழகாகக் காட்ட சிகையலங்காரத்திற்கு மேக்கப்மேன்,  உடையலங்காரத்திற்கு காஸ்ட்டியூம் டிசைனர், குரலுக்கு டப்பிங் கலைஞர் என முதுகெலும்பாக இருப்பவர்கள் ஏராளம்.

பெரும்பாலான படங்களில் இன்று நாம் கேட்கும் முன்னணி நடிகைகளின் குரலுக்கு சொந்தக்காரராகத் திகழ்பவர் ஸ்ரீஜா ரவி என்ற டப்பிங் கலைஞர்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், பெங்காலி என 6 மொழிகளில் புலமை பெற்று கிட்டத்தட்ட 2000 படங்களுக்கு மேல் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக பணிபுரிந்து வருகிறார் ஸ்ரீஜா ரவி.

கேரளாவைப் பூர்வீகமாக் கொண்ட இவரது குடும்பம் தந்தைமறைவுக்குப் பின் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. இவரது தாயும் டப்பிங் கலைஞர் தான். தாயுடன் ஸ்டூடியோக்களில் சென்று பின்னால் தானும் டப்பிங் கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கினார் ஸ்ரீ ஜா ரவி.

இளமை புதுமை சொர்ணமால்யாவின் இன்னொரு பக்கம் : எமோஷனல் பேட்டி

80-களின் நடிகைகள் முதல் இப்போதுள்ள நயன்தாரா வரை இவர் டப்பிங் கொடுக்காத நடிகைகளின் பட்டியல் மிகக் குறைவே. சிம்ரன், தேவயாணி, மனீஷா கொய்ராலா, சுவலட்சுமி, விந்தியா, பூமிகா போன்ற பல முன்னணி நடிகைகளுக்கும் குரல் கொடுத்தது இவர்தான். இன்றும் ஏதாவது ஒரு சேனலில் இவர் டப்பிங் கொடுத்த நடிகைகளின் படம் ஓடிக்கொண்டு தான் இருக்கும். அந்த அளவிற்கு பல நடிகைகளுக்கு இவர் குரல் கொடுத்துள்ளார்.

டப்பிங் கலைஞராக மட்டுமின்றி சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். அதில் மலையாளப் படங்களே அதிகம். தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் முதல் தீராக் காதல் வரை நடித்துள்ளார். மேலும் பல்வேறு விளம்பரப் படங்களுக்கும் இவரது குரல் ஒலித்தது.

இவரது மகள் யாரென்று கேட்டால் ஆச்சர்யப் படுவீர்கள். கடந்த ஆண்டு வெளியான லவ்டுடே படத்தில் யோகிபாபு ஜோடியாக நடித்த ரவீணா ரவிதான் அவர். இவரும் பல முன்னணி படங்களில் பல ஹீரோயின்களுக்கு டப்பிங் கொடுத்து வருகிறார். சமீபத்தில் வெளியான மாமன்னன் படத்தில் பகத்பாசில் மனைவியாகவும் நடித்தார்.

இவ்வாறு தாய்-மகள் இருவருமே இந்திய நடிகைகளின் குரலாக திகழ்ந்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...