கால் மேல் கால் போட்டு அமர்ந்த நடிகை.. NO சொன்ன MGR!!.. ஆனாலும் அவங்க டாப் ஹீரோயினானது எப்படி?

தமிழ் சினிமாவின் எந்த காலத்திற்கும் உரிய நம்பர் 1 நடிகராக விளங்கியவர் எம்ஜிஆர். அவர் மறைந்து சுமார் 26 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் இன்னும் அவர் மீது மக்கள் பலருக்கும் அதிக மரியாதையும், மதிப்பும் உள்ளது.

இதற்கு காரணம், திரைப்படங்களில் மட்டும் நாயகனாக களமிறங்கி மக்கள் பிரச்சனைகளைத் தட்டி கேட்கும் கதாபாத்திரத்தில் வராமல், நிஜ வாழ்க்கையிலும் அரசியலில் சேர்ந்து முதலமைச்சராக மக்கள் நாயகனாகவும் ஆட்சி புரிந்திருந்தார் எம்ஜிஆர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக எம்ஜிஆர் ஆட்சி புரிந்த சமயத்தில், மக்கள் பிரச்சனைகளை களத்திற்கே போய் தீர்த்து வைத்ததால் பலரின் குல தெய்வமாகவும் அவர் மாறி இருந்தார்.

இன்று வரை, அதிமுக என கட்சியின் பெயரைக் குறிப்பிட்டாலே முதலில் நமக்கு நினைவுக்கு வரும் பெயரும் எம்ஜிஆர் தான். அவரது மறைவுக்கு பிறகு, அதிமுக கட்சியை நடத்திய ஜெயலலிதா, எம்ஜிஆர் வழியில் நல்லாட்சி நடத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே, எம்ஜிஆர் நாயகனாக நடித்த சமயத்தில் அவர் முன் நடிகை ஒருவர் கால் மேல் கால் போட்டு அமர்ந்ததும் அதன் பின்னர் நடந்த சம்பவம் குறித்த தகவலும் தற்போது கிடைத்துள்ளது.
Mgr fight

கடந்த 80 ஆண்டுகளாக தென் இந்திய சினிமாவில் நடிகையாக தடம் பதித்து வருபவர் சவுகார் ஜானகி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென் இந்திய மொழிகளில் சுமார் 400 படங்கள் வரை நடித்துள்ள இவர், திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பின்னர் தான் நாயகியாக அறிமுகமாகி இருந்தார். குடும்ப வறுமை காரணமாக, நாயகியாக சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்த சவுகார் ஜானகிக்கு முதல் படத்திலேயே தெலுங்கு உலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த என்.டி. ராமராவ்வுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது.

தொடர்ந்து, சிவாஜி கணேசன், எம்ஜிஆர், நாகேஷ் என தமிழின் அந்த காலத்து முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ளார் சவுகார் ஜானகி. ஆனால், தான் கதாநாயகியாக அறிமுகமாகி நீண்ட நாள் கழித்து தான் எம்ஜிஆருடன் ஜோடி சேர முடிந்தது.

இதற்கு காரணம், அதற்கு முன்பாக எம்ஜிஆர் – சவுகார் ஜானகி இணைந்து நடித்த படத்தில் உருவான சிக்கல்கள் தான். ‘மாடப்புறா’ என்ற திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடிக்கவிருந்தினர். இதற்கான படப்பிடிப்பிலும் சவுகார் ஜானகி கலந்து கொண்டிருந்தார். அந்த படத்தின் காட்சிகளில் நடித்து முடித்த சவுகார் ஜானகி, கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்ததாக தெரிகிறது.
mgr with sowcar janaki

இதனைக் கண்ட எம்ஜிஆருக்கு சவுகார் ஜானகியின் நடவடிக்கை பிடிக்காமல் போகவே, இதுபற்றி உடன் நடித்த எம்.ஆர். ராதாவிடமும் கூறி உள்ளார். படித்த பெண் என்பதால் அவர் அப்படி நடந்து கொள்கிறார் என்றும், மற்றபடி அவர் சிறந்த பெண் என்றும் எம்.ஆர். ராதா எடுத்துக் கூறியும் எம்ஜிஆரால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனதெரிகிறது .

இதன் காரணமாக, சவுகார் ஜானகியை அந்த படத்தில் இருந்து நீக்கியதுடன் புதிய நாயகியை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை தொடர்ந்தனர். இதன் பின்னர், பல ஆண்டுகள் கழித்து தான் எம்ஜிஆருக்கு நாயகியாக இணைந்து நடிக்கும் வாய்ப்பு சவுகார் ஜானகிக்கு கிடைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.