எங்களைப் பிரிச்சு பார்க்காதீங்க… பிரியாமணி ஆதங்கம்…

Published:

கர்நாடகாவின் பெங்களூரில் பிறந்தவர் நடிகை பிரியாமணி. தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் நடித்துள்ளார். இவர் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளை சரளமாக பேசக்கூடியவர்.

2007 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி அறிமுகமான ‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர். அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் மற்றும் பல விருதுகளை வென்றார்.

இறுதியாக இந்தியில் நடிகர் ஷாருக் கான் மற்றும் நடிகை நயன்தாரா நடித்து 2023 இல் வெளியாகி மெகாஹிட் ஆனா ‘ஜவான்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். இதுதவிர இந்தியில் ‘ஆர்டிகிள் 360’ என்ற படத்திலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை பிரியாமணி தென்னிந்திய நடிகையாக இந்தி திரையுலகில் பணிபுரியும் போது தான் எதிர்கொண்ட சவால்களை கூறி ஆதங்கப்பட்டுள்ளார். அதில் இந்தி தயாரிப்பாளர்கள் படத்திற்காக எங்களை அணுகும் போது, இது தென்னிந்திய கதாபாத்திரம், அதனால் தான் உங்களை தேடி வந்தோம் என்று கூறுகிறார்கள்.

அதைக் கேட்பதற்கு வேதனையாக உள்ளது. நாங்கள் இந்தி நடிகைகளைப் போல் பிரகாசமாகவும், வெளிர் நிறமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நடிப்பை பொறுத்தவரை அது ஒரு விஷயமே கிடையாது.. தென்னிந்தியாவில் இருந்து வரும் எங்களாலும் சரளமாக இந்தி மொழியை பேச முடியும். வடக்கு தெற்கு என்று பாகுபாடு பார்க்கும் இந்த நிலை மாறவேண்டும். எங்களைப் பிரித்து பார்க்காதீர்கள் என்று கூறி பிரியாமணி ஆதங்கப்பட்டுள்ளார்.

மேலும் உங்களுக்காக...