மனிதர்களை போல விவாகரத்து செய்து கொள்ளும் பறவைகள்! ஆச்சரிய தகவல்கள் இதோ!

Published:

மனிதர்களை போலவே பறவைகளும் தனது இணைகளை விவாகரத்து செய்யும் என வெளியாகியுள்ள ஆய்வின் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பறவைகள் விவாகரத்து குறித்த சுவாரசியமான முழு தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

லவ் பர்ட் போல சுற்றித்திரிந்த காதலர்களும் மனம் முடித்த தம்பதிகளும் மனக்கசப்பு, கருத்து வேறுபாடு தகாத உறவு போன்ற காரணங்களால் பிரிந்து வாழ்வது உண்டு. ஆனால் காதலின் அடையாளமாக பார்க்கப்படும் ஜோடிப்பறவைகள் விவாகரத்து செய்து பிரியும் என கூறினால் யாராலும் நம்ப முடிகிறதா?.. ஆனால் அதுதான் உண்மையென ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இனப்பெருக்க காலத்தில் ஒரு பறவையுடன் ஜோடி சேரும் பறவை மற்றொரு இனப்பெருக்க காலத்தில் தனது ஜோடி உயிருடன் இருந்தாலும் வேறு பறவையுடன் இணை சேர்வதைத் தான் பறவைகள் இடையே ஏற்படும் விவாகரத்து என கூறுகின்றனர்.

இந்த பிரிவுக்கான காரணம் மனிதர்களைப் போலவே தகாத உறவு, இடம் பெயர்தலின் தூரம் போன்றவை தான் என ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியப்படுத்தியுள்ளனர் . இவை அனைத்தும் சாதாரணமாக கணிக்கப்பட்டவை அல்ல. சுமார் 232 பறவை இனங்களின் தரவுகளை ஆய்வு செய்து ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் .

சீனா மற்றும் ஜெர்மனியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட முடிவுகளை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தியது ராயல் சொசைட்டி பி என்ற இதழ். அதில் பறவைகளுக்குள் ஏற்படும் விவாகரத்தில் ஆண் பறவையின் பங்கு அதிகப்படியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தனது இணையை தவிர்த்து மற்ற பெண் பறவைகளுடன் உறவு வைத்துக் கொள்வது அந்த ஆண் பறவை மீதான ஈர்ப்பை குறைக்கிறது.

இதனால் பொறுப்பெற்ற ஆண் பறவை பெண் பறவை பிரிந்து சென்று வேறு துணையைத் தேடிக் கொள்கிறது. இடம்பெயர்தலில் நீண்ட நெடிய பயணம் மேற்கொள்ளும் பறவைகளுக்கு விவாகரத்து அதிகளவில் நடைபெறுகிறது.

ஆன்மிகத்தில் மூழ்கிய சாய் பல்லவி! அமர்நாத் கோவிலுக்கு பாத யாத்திரை!

ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் பறவைகள் ஒரு பறவை முன்னதாக சென்றுவிட்டால் தனது துணைக்காக காத்திருக்காமல் அந்த பறவை வேறு துணையைத் தேடிக் கொள்ளும். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சனைகளால் கூட பறவைகள் இடம்பெயர்தலில் தாமதம் ஏற்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி ஃபுல்வெட்ஸ், சுவாளோஸ், மாட்டன்ஸ், ஓரியோல்ஸ், பிளேக் பர்ட் போன்ற பறவைகள் அதிக விவாகரத்து விகிதங்களை கொண்டுள்ளனர். அதே போல் பெட்ரன்ஸ், அல்பட்ராஸஸ், வாத்து, அன்னப்பறவை போன்ற பறவைகள் குறைந்த விவாகரத்து விகிதங்களை கொண்டுள்ளது.

மேலும் காலநிலை மாற்றத்தால் இது போன்ற விவாகரத்துகள் அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

 

மேலும் உங்களுக்காக...