ஆன்மிகத்தில் மூழ்கிய சாய் பல்லவி! அமர்நாத் கோவிலுக்கு பாத யாத்திரை!

சிவகார்த்திகேயனின் 21 வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் நடிகை சாய் பல்லவி திடீரென ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளார். அப்போது ரசிகர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றன.

பிரேமம் என்கிற மலையாள படம் மூலம் அறிமுகமாகி, தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் சாய் பல்லவி. அந்த படத்தில் மலர் டீச்சர் கதாப்பாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

saipallavi3 1688654381

சமீபத்தில் சாய் பல்லவி தமிழில் நடித்த ‘கார்கி’ படம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகை சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஜ் கமல் பிலிம்ஸ் தாயாரித்து வரும் SK 21 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. அதில் சாய் பல்லவி அவர்களும் கலந்து கொண்டு நடித்திருந்தார். அதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தின் ரிலீஸ் வேலைகளில் பிசியாக உள்ளதால் தற்போழுது SK 21 படத்திற்கு பிரேக் விடப்பட்டுள்ளது.

பாகுபலி ஹீரோயின் குறித்து சர்ச்சை கருத்துக்களை வெளியிட்ட பயில்வான்! தேவையா இந்த வேலை…

மாவீரன் படத்தின் ரிலீசுக்கு பின்னர் இந்த படத்திற்கான படப்பிடிப்பு மீண்டும் காஷ்மீரில் தொடர்ந்து நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் காஷ்மீரில் உள்ள சாய் பல்லவி இந்த ஓய்வு நேரத்தில் ஆன்மிக சுற்றுலாவாக அமர்நாத் கோவிலுக்கு பாத யாத்திரையாக சென்றுள்ளார். அப்பொழுது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...