நடிகர் விஜயைப் பார்த்து இப்படி ஒரு வார்த்தையை சொன்ன சினேகா… விஜய் இப்படிப்பட்டவரா…?

Published:

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை சினேகா. இவரின் இயற்பெயர் சுகாசினி என்பதாகும். இவர் தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்தவர். தனது குடும்ப பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்பு திறமைக்காகவும் ஏராளமான ரசிகர்களை கொண்டிருந்தவர். இவரை புன்னகை அரசி என்று மக்கள் அழைக்கின்றனர். 2000களில் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தவர் சினேகா.

ஆரம்பத்தில் மலையாள திரைப்படத்தில் நடித்து அறிமுகமான சினேகா, 2001 ஆம் ஆண்டு என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் 2002 ஆம் ஆண்டு மம்முட்டியின் ஆனந்தம் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

ஆனந்தம் திரைப்படத்தில் வரும் பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் என்ற பாடலில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பரவினார் சினேகா. அந்த பாடல் மெகா ஹிட் ஆனது. மேலும் அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு திரைப்பட விருதை வென்றார் சினேகா.

தொடர்ந்து புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன், பார்த்திபன் கனவு, வசீகரா, ஆட்டோகிராப் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார் சினேகா. இது தவிர சினேகா பிரபலமானது எதில் என்றால் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தின் மூலமாகத்தான். அன்றைய காலகட்டத்தில் வரும் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் அனைத்திலும் சினேகா இருப்பார்.. இது தவிர ஹார்லிக்ஸ், ஆசிர்வாத் போன்ற பல விளம்பரங்களில் சினேகா நடித்தார். இவர் தமிழ் சினிமாவின் நடிகர் ஆன பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து சற்று ஓய்வு எடுத்துக் கொண்ட சினேகா, தற்போது சமீபமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் திரைப்படங்களிலும் கம்பேக் கொடுத்து நடித்து வருகிறார். அப்படி விஜய் அவர்களின் கோட் திரைப்படத்தில் சினேகா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது கோட் படத்தில் விஜயுடன் நடிக்கும் போது அவரை எப்படி எல்லாம் இருப்பார் என்பதை பற்றி ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.

சினேகா கூறியது என்னவென்றால், விஜய் சார் அமைதியானவர் தான். ஆனாலும் குழந்தைகளை அவர் எப்படி அட்ராக்ட் பண்ணுகிறார் என்று தெரியாது. எங்க வீட்டு குழந்தைங்க எல்லாருக்குமே விஜய ரொம்ப பிடிக்கும். அது மட்டும் இல்லாம சூட்டிங் ஸ்பாட் செட்டில் க்யூட்டா ஏதாவது செஞ்சுக்கிட்டே இருப்பாரு. கண்டிப்பா விஜய் ஒரு சூப்பர் ஸ்டார் தான் என்று புகழ்ந்து பேசி உள்ளார் சினேகா.

மேலும் உங்களுக்காக...