தள்ளிப்போகும் சூர்யாவின் புறநானூறு.. சுதா கொங்கரா கொடுத்த அப்டேட்

இயக்குநர் மணிரத்னத்திடம் இணை இயக்குநராகப் பணியாற்றி இறுதிச்சுற்று படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக உருவெடுத்தவர் தான் சுதா கொங்கரா. முதல் படமே பாக்ஸிங் விளையாட்டை மையப்படுத்தி எடுத்திருந்தார். இப்படம் விமர்சனம் மற்றும் வசூல்…

Purananooru

இயக்குநர் மணிரத்னத்திடம் இணை இயக்குநராகப் பணியாற்றி இறுதிச்சுற்று படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக உருவெடுத்தவர் தான் சுதா கொங்கரா. முதல் படமே பாக்ஸிங் விளையாட்டை மையப்படுத்தி எடுத்திருந்தார். இப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

இதனையடுத்து சூர்யாவை வைத்து சூரரைப் போற்று படத்தினை இயக்கினார். ஓடிடியில் வெளியான இப்படம் சக்கைப் போடு போட்டது. மேலும் இப்படத்திற்காக பல பிரிவுகளில் தேசிய விருதுகளும் கிடைத்தது. இதன்மூலம் கவனிக்கத்தக்க இயக்குநராக மாறிய சுதா கொங்கரா அடுத்தாக மீண்டும் சூர்யாவை வைத்து புறநானூறு என்ற படத்தினை இயக்கத் திட்டமிட்டிருந்தார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியது. விடுதலைப் போராட்டக் கதையை மையமாக வைத்து புறநானூற்றுக் கதை உருவாக்கப்பட்டிருந்தது. இப்படத்தினை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது.

பிரகாஷ்ராஜ் சொன்ன 15கிலோ சதை, 10 கிலோ எலும்பு இல்லை… எஸ்.ஜே.சூர்யா சொன்ன தனுஷ் சீக்ரெட்

இந்நிலையில் இப்படத்திலிருந்து சூர்யா விலகுவதாகச் செய்திகள் வந்தன. சூர்யாவின் சம்பளம், கால்ஷீட் போன்றவை காரணமாக சூர்யா இப்படத்திலிருந்து விலகுவதாகவும், அவருக்குப் பதிலாக சிவகார்த்திகேயன் நடிக்கப் போவதாகவும் செய்திகள் வந்தன. தற்போது இயக்குநர் சுதா கொங்கரா புறநானூறு குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் புறநானூறு படம் பல்வேறு காரணங்களால் தள்ளிப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. இருப்பினும் என்றாவது ஒருநாள் நிச்சயம் எடுப்பேன். அவ்வாறு உருவாகும் படம் இறுதிச்சுற்று படத்தை விட 100 மடங்கு, சூரரைப் போற்று படத்தினை விட 50 மடங்கு மிக நெருக்கமான கதை தான் புறநானூற்று கதை. ஒடுக்கு முறைக்கு எதிரான படமாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

தற்போது சூர்யா நடித்து முடித்துள்ள கங்குவா திரைப்படம் வருகிற அக்டோபர் 10-ம் தேதி தசரா விடுமுறையொட்டியை வெளியாகிறது. இதனையடுத்து நேற்று சூர்யாவின் பிறந்தநாளில் அவரது 44 படத்தின் அறிவிப்பு வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது போல தற்போது புறநானூறு படமும் அந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளது.