உலகின் அதிவேக விவாகரத்து செய்த தம்பதி.. மூன்றே நிமிடத்தில் முடிவுக்கு வந்த திருமணம்..

குவைத் : திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது என்று ஒரு சொல் வழக்கு உண்டு. திருமண பந்தத்தில் இணைந்தவர்கள் இணைபிரியா தம்பதிகளாக ஊர் போற்றும் வகையில் வாழ்ந்து காட்டுகின்றனர். எந்தத் துன்பம் வந்தாலும்…

Divorce

குவைத் : திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது என்று ஒரு சொல் வழக்கு உண்டு. திருமண பந்தத்தில் இணைந்தவர்கள் இணைபிரியா தம்பதிகளாக ஊர் போற்றும் வகையில் வாழ்ந்து காட்டுகின்றனர். எந்தத் துன்பம் வந்தாலும் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சுக, துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்கின்றனர். விவாகரத்து என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

ஆனால் இந்தக் கதையெல்லாம் அந்தக் காலத்துல தாங்க என்று சொல்லுமளவுக்கு தற்போது விவாகரத்து எண்ணிக்கை பெருகி வருகிறது. ஆகாத மனைவி கை பட்டாலும் குற்றம், கால்பட்டாலும் குற்றம் என்ற பழமொழி போல் எதற்கெடுத்தாலும் விவாகரத்து செய்வது பேஷனாகி விட்டது. இருப்பினும் தம்பதிகள் பரஸ்பரம் விவாகரத்து கோரி நீதிமன்றத்தினை நாடும் போது குடும்ப நல நீதிமன்றம் அவர்கள் மீண்டும் இணைந்து வாழ பல்வேறு வகைகளில் சந்தர்ப்பம் அளிக்கிறது. கடைசி கட்டமாகத் தான் விவாகரத்துக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில் குவைத் நாட்டில் ஓர் சம்பவம் நடைபெற்றிருக்கிறது. திருமண நாளிலேயே விவாகரத்து செய்த சம்பவம் வைரலாகி வருகிறது. குவைத் நாட்டைச் சேர்ந்த தம்பதிகளுக்கு கடந்த 2019-ல் திருமணம் நடைபெற்றிருக்கிறது. ஆனால் திருமணம் முடிந்த அடுத்த மூன்றாவது நிமிடத்தில் அவர்களுக்கு விவாகரத்து கொடுக்கப்பட்டிருக்கிறது. திருமண நிகழ்வின் போது கால்தடுக்கி கீழே விழுந்த மனைவியை கணவன் முட்டாள் என்று திட்டியிருக்கிறார்.

தொல். திருமாவுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பீங்களா? கொளுத்திப் போட்ட தமிழிசை..

இதனால் உடனே கோபப்பட்ட மனைவி திருமண நிகழ்விற்கு வந்த நீதிபதியிடம் தனக்கு இவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று கோரி இப்பொழுதே விவாகரத்து கொடுக்க வேண்டும் என்று முறையிட அவரும் விவாகரத்து வழங்கியிருக்கிறார். உலக வரலாற்றில் மிக அதிவேகமாக விவாகரத்து கொடுத்த வழக்காக இது கருதப்படுகிறது. இதனை எக்ஸ் தளத்தில் ஒருவர் பதிவிட்ட நிலையில் தற்போது இச்செய்தி வைரலாகி வருகிறது.