11 வருடங்களாக ரோஜாவுக்காக காத்தருந்த செல்வமணி.. இப்படி ஒரு லவ்-ஆ?

By John A

Published:

சினிமாவில் எத்தனையோ நட்சத்திர தம்பதிகள் இருந்தாலும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி-ரோஜா தம்பதிகள் எப்பவுமே ஸ்பெஷல்தான். ஏனென்றால் தனது காதல் மனைவியைக் கரம்பிடிக்க 11 வருடங்கள் காத்திருந்தாராம் ஆர்.கே.செல்வமணி. இந்தக் காலகட்டங்களில் ரோஜாவின் மேல் அவர் கொண்ட காதல், இன்ப துன்பங்களில் பங்கெடுத்தல் என ரோஜா மீது அவர் கொண்ட இந்த அன்பு ரோஜாவுக்கு செல்வமணி மீது மிகுந்த காதலை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த நடிகை ரோஜா செம்பருத்தி படம் மூலமாக தமிழில் அறிமுகமானார். இந்தப் படத்தினை இயக்கியவர் ஆர்.கே.செல்வமணி. 1990களின் காலகட்டங்களில் புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், செம்பருத்தி என மூன்று ஹாட்ரிக் மெகாஹிட் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராகத் திகழ்ந்தார் ஆர்.கே.செல்வமணி.

செம்பருத்தி பட ஷுட்டிங்கின் போது ரோஜா மீது காதல்வயப்பட தனது காதலைத் தெரிவித்திருக்கிறார். ஆர்.கே.செல்வமணி பற்றி நன்கு அறிந்திருந்த ரோஜா காதலுக்குப் பச்சைக் கொடி காட்ட இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

அப்போது இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கையில் ஆர்.கே.செல்வமணி தனது குடும்பத்தை செட்டில் செய்து பின்னர் மணம் முடிக்கலாம் என்று கூறியிருக்கிறார். இதற்கிடையில் ரோஜாவும், ஆர்.கே.செல்வமணியும் இணைந்து அதிரடிப்படை என்ற படத்தைத் தயாரித்தனர்.

வெள்ளித்திரையால் ஒதுக்கப்பட்டு சின்னத்திரையில் சாதித்த காவேரியா இது..? ஆளே அடையாளம் தெரியலையே..!

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தான். இந்தப் படம் தோல்வியைத் தழுவ இவர்கள் சேர்த்து வைத்திருந்த அனைத்து சொத்துக்களும் கையைவிட்டுப் போனது. இதனால் ஆர்.கே.செல்வமணி மனம் உடைந்த தருணத்தில் அவருக்குப் பக்க பலமாக இருந்தது ரோஜாதானாம்.

மேற்கொண்டு பல படங்களில் நடித்து அந்தக் கடனையெல்லாம் அடைத்து பின்னர் மீண்டும் வாழ்க்கையில் முன்னேறி இருக்கின்றனர். அதிலிருந்து மீண்டு வருவதற்கே இவர்களுக்கு 11 ஆண்டுகள் ஆனது.இந்தப் 11 வருடத்தில் ஒருவர் மீது ஒருவர் கொண்ட உண்மையான காதல் மட்டுமே ஒரு சின்ன விரிசல் கூட விழாமல் பார்த்திருக்கிறது. இதனையடுத்து 2002-ல் இருவீட்டர் சம்மதத்துடன் ஆர்.கே.செல்வமணிக்கும்-ரோஜாவுக்கும் திருமணம் நடந்திருக்கிறது.

இதன்பின் ரோஜா திரைத்துறையிலிருந்து விலகி அரசியல் பக்கம் செல்ல அதற்கு ஆர்.கே.செல்வமணி பெரிதும் துணைபுரிந்திருக்கிறார். தன் மனைவியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்த ஆர்.கே.செல்வமணி இன்றுவரை தனது காதல் மனைவியின் அன்பில் கட்டுண்டவராக இருவரும் சிறந்த தம்பதிகளாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

மேலும் உங்களுக்காக...