வெள்ளித்திரையால் ஒதுக்கப்பட்டு சின்னத்திரையில் சாதித்த காவேரியா இது..? ஆளே அடையாளம் தெரியலையே..!

டாப் ஸ்டார் பிரசாந்த் அறிமுகமான வைகாசி பொறந்தாச்சு படத்தில் அவருக்குக் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நாயகிகளில் ஒருவர்தான் நடிகை காவேரி. வைகாசி பொறந்தாச்சு படத்தின் சூப்பர் டூப்பர் ஹிட்டால் அதிக கவனம் பெற்றார்.

நடிகர் பிரசாந்த்துக்கு இந்தப் படத்தினையடுத்து தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பிக்க ஆனால் காவேரிக்கோ வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை. எனினும் உன்னை நான் வாழ்த்துகிறேன், பந்தயக் குதிரை, போக்கிரி தம்பி, சாகசம், செண்பகம் போன்ற படங்களில் நடித்தார். எனினும் இவர் நடித்த படங்கள் வைகாசி பொறந்தாச்சு படத்தின் அளவிற்கு எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் சினிமாவிலிருந்து ஒதுங்க ஆரம்பித்தார்.

இதனையடுத்து வெள்ளித்திரை இவரைக் கைவிட்ட நிலையில் சின்னத்திரை பக்கம் தலைகாட்டத் தொடங்கினார். சின்னத்திரை அவரை வாரிக் கொண்டது. தூர்தஷ்ன், சன்டிவி, கலைஞர் டிவி போன்ற தொலைக்காட்சிகளில் பிரபல தொடர்களில் நடித்தார். எனினும் சன்டிவியில் ஒளிப்பரப்பான மெட்டி ஒலி சீரியல் இவருக்குப் பெரிய புகழை ஈட்டித் தந்தது. இந்த சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் 4 தங்கைகளின் அக்காவாக வாழ்ந்திருப்பார்.

சிங்கிள் பேரண்ட் கஷ்டங்களை உணர்த்திய எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி.. நதியாவுக்கு கிடைத்த கம்பேக்

இந்த சீரியலில் இவரின் எதார்த்தமான நடிப்புக்கு இரசிகர்கள் பலர் உருவாயினர். இதனைத் தொடர்ந்து வம்சம் சீரியலிலும் நடித்தார். இந்த சிரியலும் இவருக்குப் பெயர் பெற்றுக் கொடுத்தது. இதனையடுத்து காவேரி சீரியல்களிலிருந்து விலக ஆரம்பித்தார். அவரின் சகோதரர் மற்றும் தாயின் மரணத்தினையடுத்து சில ஆண்டுகள் மன அழுத்தத்திற்கு ஆளானார். அப்போது ஊட்டியில் உள்ள இவரது வீட்டில் சில ஆண்டுகள் வாழ்ந்தார். அதன்பின் கிருஷ்ணகிரியில் உள்ள தனது பண்ணை வீட்டில் சில ஆண்டுகள் வாழ்ந்தார். அதனைத் தொடர்ந்து சென்னைக்கு சொத்து விஷயமாக மீண்டும் வந்தவர் இங்கேயே மீண்டும் தங்கியிருக்கிறார்.

மெட்டி ஒலி சீரியலில் பார்த்த தனத்துக்கும் இப்போதுள்ள காவேரிக்கும் ஆளே அடையாளம் தெரியாதது போல் மாறியிருக்கிறார். தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டு உடல் பருமனுக்கு ஆளானவர். சிகிச்சை எடுத்து மளமளவென உடல் எடையைக் குறைத்து மீண்டும் பழைய வைகாசி பொறந்தாச்சு ஹீரோயின் போல் இருக்கிறார் காவேரி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...