பெற்ற மகளின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த ‘பேரன்பு’ படம் | அதான் இயக்குநர் ராமின் டச்

Published:

மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது அல்ல என்று ஆனந்தயாழாக தந்தை மகள் உறவைப் போற்றிய படம் தங்க மீன்கள். இயக்குநர் ராமின் படைப்பில் நா.முத்துக்குமார்-யுவன் கூட்டணியில் உருவான இப்பாடல் இன்றும் மகள்களைப் பெற்ற தந்தைகளின் தேசிய கீதமாகத் திகழ்கிறது.

கற்றது தமிழ் படம் முலம் சினிமா உலகில் அறிமுகமான இயக்குநர் ராம், மனிதர் உணர்வைப் பேசும் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை எடுப்பதில் வல்லவர். கற்றது தமிழை நாம் இப்போதும் கொண்டாடக் காரணம் தூய காதலைச் சொன்ன காவியம் அது.

பாலு மகேந்திராவின் பட்டறையில் இருந்து உருவானவர் அல்லவா அதன் தாக்கம் இருக்காதா? ஏற்கனவே பாலா உள்ளிட்டோர் இந்த வரிசையில் இருக்க இயக்குநர் ராமும் மனித உணர்வுகளை தனது படங்களில் பேசியிருப்பார்.

தங்கமீன்களை அடுத்து மம்முட்டியின் நடிப்பில் உருவான பேரன்பு படம் காண்போர் கண்களை குளமாக்கும் என்றே சொல்லலாம். மாற்றுத் திறனாளியான தனது மகளை கவனித்துக் கொள்ளும் தந்தை கதாபாத்திரத்தில் நிஜமாகவே வாழ்ந்திருப்பார் மம்முட்டி. அதில் வரும் ஒருசீன் தான் இது.

“நான் சாதி பார்த்து வளரல…“ மெட்ராஸ் திரைப்படம் குறித்த கேள்விக்கு சுளீர் பதில் கொடுத்த கார்த்தி

இதுவரை யாரும் யோசிக்காத ஒரு மனித நேயம் உள்ள ஒரு சிந்தனை அது, மனநலம் குன்றிய ஒரு பெண்ணின் உடல் தேவை என்ன என்பதையும் அந்த உணர்வு அவர்களுக்கும் இருக்கும் என்பதை கூறிய காட்சி.

peranbu 1

காண்போரை அழவைத்த  அந்தக் காட்சியில் மனநலம் குன்றிய மம்முட்டியின் மகளுக்கு பெண்ணுக்கு காம உணர்வு இருக்கும் என்பதை அவர் அறிந்து அதை அவர் ஒரு தந்தையாக எப்படி கையாள்கிறார் என்பதை காட்சிகளில் அழகாக புகுத்தியிருப்பார் இயக்குர் ராம்.

பேரன்பு படத்தில் வரும் இந்த காட்சியை சினிமா விமர்சகர்கள் கொண்டாடினர். மேலும் ஒரு படைப்பின் நோக்கத்தையும் அறிந்து இவ்வாறு மாற்றுத்திறன் படைத்தவர்களின் எண்ணங்களையும் அவர்களின் தேவைகளையும் அறிந்து செயலாற்றுங்கள் என்பதையும் பேரன்பு மூலமாக அழகாகச் சொல்லியிருப்பார் இயக்குநர் ராம். 

கமர்ஷியல் சினிமாக்களுக்கு மத்தியில் அவ்வப்போது அத்திபூத்தாற் போல தங்கமீன்கள், பேரன்பு மாதிரியான படங்கள் தமிழ் சினிமாவை உலகத் தரத்தில் உயர்த்துகிறது. அதற்கு இயக்குநர் ராமின் படைப்புகள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

மேலும் உங்களுக்காக...