“நான் சாதி பார்த்து வளரல…“ மெட்ராஸ் திரைப்படம் குறித்த கேள்விக்கு சுளீர் பதில் கொடுத்த கார்த்தி

இயக்குநர்களின் கதாநாயகன் என்றால் அது நடிகர் கார்த்தியைச் சொல்லாம். எப்படி அமீருக்கு ஒரு ‘பருத்தி வீரன்‘ போல, பா. ரஞ்சித்துக்கு ‘மெட்ராஸ்‘, ஹெச்.வினோத்துக்கு ‘தீரன் அதிகாரம் ஒன்று‘, லோகேஷ் கனகராஜ்க்கு ‘கைதி‘ சுசீந்திரனுக்கு ‘நான் மகான் அல்ல‘என இயக்குநர்களின் இமாலாய வெற்றிக்கு பின்னால் ஒரு கார்த்தி படம் திருப்புமுனையாக அமைந்துள்ளது எனலாம். இதனாலயே கார்த்தியை இயக்குநர்களின் நாயகன் என்று திரையுலகம் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது.

‘அட்டகத்தி‘ படத்திற்குப் பின்னர் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியானது தான் மெட்ராஸ் திரைப்படம். அட்டகத்தி படத்தில் சென்னையைத் தாண்டிய கிராமங்களில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை படம்பிடித்துக் காட்டியிருப்பார். இதில் அட்டகத்தியாக தினேஷ் நடிக்க முதலில் சரியாகப் போகவில்லை என்றாலும் பின்னர் விமர்சனங்களால் வெற்றி பெற்றது. இதையடுத்து அவர் இயக்கிய மெட்ராஸ் படமும் வட சென்னை மக்களின் அரசியலைப் பேசும் படமாக அமைந்திருந்து.

இதில் கதாநாயகனாக கார்த்தி நடிக்க கலையரசன், கேத்ரின் தெரசா, ரித்விகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப்படம் வடசென்னையின் ஒரு பகுதியில் இருக்கும் இரு அரசியல் கட்சிகளுக்கு இடையேயான மோதலைக் கையாண்டது. அதிலும் குறிப்பாக ஒரு சுவற்றை வைத்தே மொத்தப் படமும் நகரும் விதமாக காட்சிகளை வைத்திருப்பார் இயக்குநர்.

படத்தில் கூட மகன் புகைப்பிடிப்பதை கண்டிக்கல.. பேச வந்துட்டாரு.. விஜய்க்கு பதிலடி கொடுத்த ராஜேஸ்வரி பிரியா!

அம்பேத்கார் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட பா.ரஞ்சித் மீது சாதி ரீதியிலான படங்களை இயக்குபவர் என்ற முத்திரை விழுந்ததால் கார்த்தியும் இதில் எப்படி நடித்தார் என்ற கேள்வி எழுந்தது. இந்தக் கேள்விக்கு பேட்டி ஒன்றில் கார்த்த அளித்த பதில் இதான்,

Madras Poster

”மெட்ராஸ் திரைப்படத்தை நான் சாதிப் படமாக பார்க்கவில்லை. ஒரு சுவரை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை என்பதால் நான் நடிக்க ஒப்புக் கொண்டேன். மேலும் நான் எங்கும் சாதி பார்த்ததில்லை. அது எனக்கு அறவே பிடிக்காது. சென்னையில் வளர்ந்தவர்கள் யாரிடமும் சாதி பார்ப்பதில்லை. நானும் அவ்வாறே வளர்ந்தேன். நான் சாதி பார்க்கவில்லை என்றும் உங்கள் பார்வையில் தான் அது சாதிப்படமாகத் தெரிகிறது” என்றும் கூறினார். தங்கலான் படம் திரைக்கு வர தயாராக உள்ள நிலையில் கார்த்தியின் இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews