கார்த்தி தமிழ் சினிமா நடிகர்களில் ஒருவர். இவர் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். இப்ப்டம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் இப்படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.
இவர் ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ், விருமன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் இப்படங்கள் இவருக்கென தனி அடையாளத்தை பெற்று தந்தது. மேலும் இவர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இவர் மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி திரைப்படத்தில் நடித்தார். இப்படம் இவருக்கு வெற்றிப்படமாகவே அமைந்தது.
முன்னணி சேனல்களுக்கு சவால் விடப்போகும் DD பொதிகை : அடேங்கப்பா இம்புட்டு அப்டேட்டா?
இவர் கதாநாயகனாய் அறிமுகமாவதற்கு முன் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் தமிழில் 25 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் 25வது திரைப்படம்தான் இன்று வெளியான ஜப்பான் திரைப்படம். இப்படத்தினை இயக்குனர் ராஜு முருகன் இயக்கினார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அணு இம்மானுவேல் நடித்திருந்தார்.
பெரிய நடிகரை வைத்து படம் இயக்க ஆசைப்பட்ட இயக்குனர் ராஜுமுருகனுக்கு கார்த்தியை வைத்து சரியாக படம் இயக்க தெரியவில்லை என்றுதான் கூறவேண்டும். இப்படத்தின் கதை சாதாரண கதையாகவே இருப்பதாக படத்தினை பார்த்தவர்கள் கருத்தினை தெரிவித்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகனாக இருந்து கொண்டு அஜித்தை புகழ்ந்து தள்ளும் ராகவா லாரன்ஸ்!
ஜுவல்லரியில் நகையை திருடும் திருடனாக கார்த்தி நடித்துள்ளார். அவர் பெயர்தான் ஜப்பான். இவரை தேட ஆரம்பித்த போலிஸார் அவரை கண்டிபிடித்தார்களா? இல்லையா? என்பதுதான் ஜப்பான் திரைப்படத்தின் கதை. இடையிடையே கார்த்தியின் நக்கல் கலந்த காமெடி என படம் ஒரு ஆவரேஜ் படமாகவே வந்துள்ளது.
மேலும் பருத்திவீரன், கைதி போன்ற வெற்றித்திரைப்படங்களை கொடுத்த கார்த்திக்கு இப்படம் சரியானதாக இல்லையென நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இனிமேலாவது கார்த்தி தனது திரைப்படங்களை கவனத்துடன் செலக்ட் செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அடுத்த பேய்ப் படத்தில் ஆர்யா : வெளியான புது அப்டேட் : ஆனா தியேட்டரில் அல்ல.