அடுத்த பேய்ப் படத்தில் ஆர்யா : வெளியான புது அப்டேட் : ஆனா தியேட்டரில் அல்ல.

மாறுபட்ட கதாபாத்திரங்களுக்கு பொருத்தமானவர் என்றால் நடிகர் ஆர்யாவை குறிப்பிடலாம். இயக்குனர் விஷ்ணுவர்தனின் ஃபேவரிட் ஹீரோவான ஆர்யா அவரின் அறிந்தும் அறியாமலும், பட்டியல், ஆரம்பம் போன்ற படங்களில் நடித்தார். இயக்குனர் பாலாவின் நான் கடவுள் திரைப்படம் ஆர்யாவுக்கு ஒரு பெரிய திருப்புமுனையை கொடுக்க ஆர்யாவின் சினிமா வாழ்க்கை அடுத்த பயணத்தை நோக்கி ஆரம்பித்தது.

தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் உள்ள மாறுபட்ட கேரக்டர்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்து வைத்திருக்கிறார் ஆர்யா. சர்வம், இரண்டாம் உலகம், சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் ஆர்யாவின் நடிப்புத் திறனை வெளிக்கொண்டுவந்த படங்களுள் குறிப்பிடத்தகுந்தவை.

தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் வரிசையாக பேய் படங்கள் வர ஆர்யாவும் இயக்குனர் சுந்தர் சி இயக்கிய அரண்மனை 3 காமெடி ஹாரர் படத்தில் நடித்தார். அதன் பிறகு ஆர்யா சக்தி சிதம்பரம் இயக்கிய ஏலியன்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கேப்டன் படத்திலும் நடித்து கவனம் ஈர்த்தார்.

மனைவி மற்றும் மகன் குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நெத்தியடி பதில் கொடுத்த தளபதி விஜய்!

தற்போது மீண்டும் அதே போன்று ஒரு ஹாரர் வெப் சீரிஸிலும் ஆர்யா நடித்திருக்கிறார். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் ‘தி வில்லேஜ்‘ என்ற வெப் சீரிஸில் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ளார்.

இதில் ஒரு காட்டில் பேய்களிடம் மாட்டிக் கொள்ளும் தன் குடும்பத்தை காப்பாற்றும் கதாபாத்திரத்தில் ஆர்யா நடித்துள்ளார். நவம்பர் 24 இல் வெளியாகும் தி வில்லேஜ் ஓடிடி தொடர் ஹாரர், ஜாம்பி மற்றும் பேய் படங்களை பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழின் முதல் கிராஃபிக்ஸ் நாவல் வெப்சீரிஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே விமல் நடித்த விலங்கு, அயலி போன்ற வெப் சீரிஸ் தொடர்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் தற்போது அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய் நடித்த லேபிள், ஆர்யாவின் தி வில்லேஜ் ஆகிய தொடர்களும் கவனம் ஈர்த்துள்ளன.

இவ்வாறு முன்னணி கதாநாயகர்கள் ஓடிடி பக்கம் திரும்புவதால் ஓடிடி தளத்தில் பார்வையிடும் ரசிகர்களும் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...