சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகனாக இருந்து கொண்டு அஜித்தை புகழ்ந்து தள்ளும் ராகவா லாரன்ஸ்!

அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் இந்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கலை முன்னிட்டு வெளியான துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விடாமுயற்சி திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெறும் இந்த படத்தின் படப்பிடிப்புகளில் நடிகை திரிஷாவும் கலந்து கொண்டுள்ளார். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரித்து வருகிறது. பல நாள் எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த விடாமுயற்சி திரைப்படம் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மிகச்சிறந்த ரசிகரான ராகவா லாரன்ஸ் தல அஜித் குறித்து மாஸ் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். ரஜினியின் வெறியன் என்று அழைக்கப்படும் ராகவா லாரன்ஸ் முதலில் பிரபு தேவா மாஸ்டர் மற்றும் ராஜசுந்தரம் மாஸ்டர் நடன குழுவில் ஓர் நடன கலைஞராக பணியாற்றத் தொடங்கி பின் தன் திறமையின் மூலமாக படிப்படியாக முன்னேறி இன்று மிகப்பெரிய டான்ஸ் மாஸ்டராக உருவாகியுள்ளார். அதைத்தொடர்ந்து அவர் கோரிகிராப் செய்யும் பாடல்களில் நடனமாடி மக்கள் இடையே பிரபலமடைய தொடங்கினார்.

அதன் பின் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த லாரன்ஸ் ஹீரோவாக பல திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவர் ஹீரோவாக நடித்த பல திரைப்படங்கள் சுமாரான வெற்றியை பெற்றிருந்தாலும் அவர் இயக்கத்தில் வெளியாகும் திரில்லர் திரைப்படங்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஜிகர்தண்டா xx திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ராகவா லாரன்ஸ் ஈடுபட்டு வருகிறார்.

அப்பொழுது லாரன்ஸ் தனது முதல் திரை அனுபவம் குறித்தும் தாம் ஆடிய முதல் பாடல் குறித்தும் சில கருத்துக்களை பதிவிட்டு இருந்தார். அதில் தல அஜித் நடிப்பில் உருவான அமர்க்களம் திரைப்படத்தின் மகா கணபதி பாடல் மூலமாக தான் திரையில் அறிமுகமானதாக லாரன்ஸ் தெரிவித்திருந்தார். பரத்வாஜ் இசையில் குத்து பாடல் ஆக வெளியாக இருந்த அந்த பாடலில் முதலில் நடனமாட இருந்தது நடிகர் அஜித் அவர்கள் தான்.

அண்ணாத்த திரைப்படத்திற்கு முன் ரஜினியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை தவறவிட்ட கார்த்திக் சுப்புராஜ்!

ஆனால் படப்பிடிப்பின் போது அஜித் தன்னை விட ராகவா லாரன்ஸ் சிறப்பாக ஆடுவதாக கூறி இந்த பாடலுக்கு அவரை நடனமாடட்டும் என விட்டுக் கொடுத்துள்ளார். ராகவா லாரன்ஸ் படப்பிடிப்பின் போது நடன பயிற்சி எடுத்துக் கொள்வதை கவனித்த அஜித் தன்னைவிட இந்த பாடலுக்கு அவர் ஆடினால் சிறப்பாக இருக்கும் என்று முடிவெடுத்து படத்தில் அந்த பாடலுக்கு லாரன்ஸை நடனமாட வைத்திருப்பார். அந்த பாடலும் லாரன்ஸ் இருக்கு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்தது.

மேலும் அமராவதி திரைப்படத்தின் போது அஜித் அவர்களுடன் தனக்கு எந்த நெருக்கமும் இல்லை அப்படி இருந்தும் அந்தப் பாடலின் வாய்ப்பை எனக்கு விட்டுக் கொடுத்த அஜித் அவர்களை என் மனதில் என்றும் உயர்வான இடத்தில் வைத்திருப்பேன். அவர் செய்த உதவியை மறக்க மாட்டேன் என்று ராகவா லாரன்ஸ் அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார். இந்த பேட்டியை தற்போது அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.