முன்னணி சேனல்களுக்கு சவால் விடப்போகும் DD பொதிகை : அடேங்கப்பா இம்புட்டு அப்டேட்டா?

இந்தியாவில் தொலைக்காட்சி சேவை ஒளிபரப்பாகத் தொடங்கிய போது முதன்முதலில் அரசுத்துறை தொலைகாட்சியான தூர்தர்ஷன் மட்டுமே தனது சேவையை வழங்கியது. ரேடியோவிற்கு மாற்றாக தொலைக்காட்சிப் பெட்டிகள் ஒவ்வொர் வீட்டையும் ஆக்கிரமிக்கத் தொடங்கிய காலங்களில் தூர்தர்ஷன் என்ற ஒரு சேனல் மட்டுமே இருந்தது. அதுவும் தமிழ் மொழிக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த நேரங்களில் மட்டுமே தமிழ் நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ஒலியும், ஒளியும் பாடல் நிகழ்ச்சிக்கு அடிமையாகாத 80, 90s கிட்ஸ்களே கிடையாது. மேலும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் படங்களைப் பார்க்க தொலைக்காட்சி முன் அமராத மக்கள் மிகவும் குறைவு என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு தூர்தர்ஷன் ஒவ்வோர் வீட்டிலும் குடும்பத்தில் ஒருவராக இருந்தது.

அதுமட்டுமன்றி எத்தனை மனிதர்கள், ஜெய் ஹனுமான், ஓம் நமச்சிவாயா, சாந்தி, ஸ்ரீ கிருஷ்ணா போன்ற பிரபல தொடர்களும் மக்கள் மனதைக் கவர்ந்தன. நாளடைவில் சன்டிவி போன்ற தனியார் சேனல்களின் வரவும், புதுமையான நிகழ்ச்சிகளும் தூர்தர்ஷனை பின்னுக்குத் தள்ளியது.

பின்னர் 2000-ம் ஆண்டில் தூர்தர்ஷன் என்பது டிடி பொதிகையாக மாறியது. அதன் பின்னர் தனியார் சேனல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் போல புதுமை வடிவம் பெற்றது. இன்றும் அரசுச் செய்திகளை சரியாக கொண்டு சேர்ப்பது என்றால் அது டிடி பொதிகை மட்டுமே.

இந்த ஹிட் பாட்டெல்லாம் இவங்க எழுதியதா? இது தெரியாமப் போச்சே..!

தற்போது டிடி பொதிகை சேனல் மேலும் மறுவடிவம் பெறப் போகிறது. மத்திய இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களிடம் இதுகுறித்துப் பேசுகையில், தற்போது டிடி பொதிகை தொலைக்காட்சி வருகிற 2024 பொங்கல் தினம் முதல் டிடி தமிழ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது. அரசியல் விவாதங்கள், புதுமையான நிகழ்ச்சிகள், சினிமா நிகழ்ச்சிகள் என தனியார் சேனல்களைப் போல் மறுவடிவம் பெறப்போகிறது“ என்றும் தெரிவித்தார்.

டிடி பொதிகையில் காலை வணக்கமும், வயலும் வாழ்வும், செய்திகளையுமே பார்த்துக் கொண்டிருந்த நாம் இனி மற்ற தனியார் சேனல்களைப் போல் கமர்ஷியலாக அனைத்து  நிகழ்ச்சிகளையும் கண்டுகளிக்கலாம். இதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews