ஜோதிகா நடிப்பை தூக்கிச் சாப்பிட்டாரா கங்கனா ரனாவத்? சந்திரமுகி 2 படம் எப்படி இருக்கு? இதோ விமர்சனம்!

Published:

சந்திரமுகி விமர்சனம்:

சந்திரமுகி முதல் பாகத்தின் இறுதியில் கங்கா தன்னை சந்திரமுகியாக நினைத்துக் கொண்டிருக்க மனோ தத்துவ முறையில் கங்காவை காப்பாற்றியிருப்பார் சரவணன் ரஜினிகாந்த்.

இனிமேல் உன் பெட்ரூமையே சந்திரமுகி அறைக்கு ஷிஃப்ட் பண்ணிக்கோ என ரஜினி சொல்லிட்டு செல்வார். ஆனால், செந்தில் தனது காண்ட்ராக்ட் முடிந்து வேறு இடத்துக்கு சென்று விட சந்திரமுகி அறையில் இன்னமும் அமானுஷ்யம் அந்த வீட்டில் இருப்பதாகவும் முருகேசன் வசம் தற்போது அந்த அரண்மனை இருப்பதாகவும் இரண்டாம் பாகத்தில் காட்டுகின்றனர்.

இன்னொரு பக்கம் நடிகை ராதிகா சரத்குமார் பெரிய பணக்காரராக இருந்தாலும், ஏகப்பட்ட சோதனைகள் தொடர்ந்து அவரது குடும்பத்தில் உள்ள பலரையும் வாட்டி வதைத்து வரும் நிலையில், ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு தனது சொந்த ஊரில் உள்ள குல தெய்வ கோயிலுக்குச் செல்ல முடிவெடுக்கிறார்.

கங்கனா ரனாவத் கர்ஜனை:

அங்கே அவர்கள் தங்க பிரம்மாண்டமான வேட்டைய ராஜா அரண்மனை தேர்வு செய்கின்றனர். இவர்கள் குடும்பத்துக்கும் ராகவா லாரன்ஸுக்கும் என்ன சம்பந்தம், என்ன பிரச்சனை என்பதை காட்டுகின்றனர். மீண்டும் சந்திரமுகி அறையை திறக்க சிருஷ்டி டாங்கே, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் முயற்சி செய்ய சந்திரமுகி இந்த முறை யார் உடம்பில் இறங்குகிறது என்றும் அதன் பிளாஷ்பேக் கதை எப்படி போகிறது, ஒரிஜினல் சந்திரமுகியே வந்து இறங்கியிருக்கும் நேரத்தில் ஒரிஜினல் வேட்டையன் எப்படி ராகவா லாரன்ஸ் உடம்புக்குள் இறங்கி சந்திரமுகியை பேய்க்கும் பேய்க்கும் சண்டை என்கிற பாணியில் கட்டுப் படுத்தினாரா? இல்லை சந்திரமுகியின் பழி வாங்கும் குணத்தால் பலியானாரா? என்கிற பரபரப்புடன் இந்த படத்தை பி. வாசு இயக்கி உள்ளார்.

முதல் பாகம் அளவுக்கு இல்லை:

ரஜினிகாந்த், ஜோதிகாவின் நடிப்பு சந்திரமுகி படத்துக்கு எந்தளவுக்கு கைகொடுத்து மிகப்பெரிய வசூல் வேட்டை படமாக மாற்றிய நிலையில், ஜோதிகா அளவுக்கு கங்கனா ரனாவத்தால் நடிக்க முடியுமா? என்கிற கேள்வி தான் ரசிகர்களின் முதல் கேள்வியாக இருந்தது. ஆனால், அதனை அசால்ட்டாக தனது தேர்ந்த நடிப்பால் தேசிய விருது வென்ற நடிகை கங்கனா ரனாவத் நடித்து ஸ்கோர் செய்த நிலையில், தான் சந்திரமுகி 2 படத்தை நம்பிப் போன ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றம் இல்லாமல், என்ஜாய் பண்ணக் கூடிய படம் பார்த்த ஃபீலிங்கை கொடுத்துள்ளது.

வடிவேலு மற்றும் ராகவா லாரன்ஸ் காமெடி காட்சிகள் ஓகே ரகம் தான். சந்திரமுகியை மறந்து விட்டு சந்திரமுகி 2 படத்தை பார்த்தால் நிச்சயம் திருப்தியோடு வீடு திரும்பலாம். எப்படி இருந்தாலும், முதல் பாகத்தை எந்த வகையிலும் இரண்டாம் பாகம் முந்தவில்லை என்றாலும், அதன் பெயரை கெடுக்காமல் நல்ல படைப்பாகவே சந்திரமுகி 2 வெளியாகி உள்ளது ஆறுதல்.

சந்திரமுகி 2 – சற்றே சறுக்கல்

ரேட்டிங்: 3.5/5.

5 வயது முதல் நடிப்பு.. 45 ஆண்டுகளில் 750 படங்கள்.. நடிகை சண்முகப்பிரியாவின் திரையுலக பயணம்..!

எம்ஜிஆர் முதல் விஜய் வரை.. 400 படங்களுக்கும் மேல் நடித்த டைப்பிஸ்ட் கோபு ..!

ஒரே ஆண்டில் 9 படங்கள்… 3 படங்களில் ஒரே இயக்குனர்.. சிவாஜியின் சாதனை..!

மேலும் உங்களுக்காக...