அப்பாட…. ஒருவழியாக வந்துவிட்ட விக்ரம் பட ரிலீஸ் தேதி… இதுவாவது நடக்குமா?

Published:

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாக இருந்த படம் துருவ நட்சத்திரம். இந்தப் படம் கடந்த ஆண்டே ரிலீஸ் ஆக்க திட்டமிடப்பட்டதாம். ஆனால் ஏதோ சில காரணங்கள் அது தாமதமாகிக் கொண்டே வந்தது..

படத்தில் ச்சீயான் விக்ரம் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படத்தைத் திரையில் காண ரசிகர்கள் கட்டுக்கடங்காத ஆவலுடன் காத்திருக்கின்றனர்.படம் ஒருவழியாக ரம்ஜான் வார இறுதியில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனராம்.

அதன்படி வரும் ஏப்ரல் 11 அன்று ரிலீஸ் ஆக உள்ளதாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். துருவ நட்சத்திரம் ரிலீஸ் தாமதம் என அறிவிக்கும்போது முன்னதாக கௌதம் மேனன் எக்ஸ் தளத்தில் இவ்வாறு குறிப்பிட்டார். மன்னிக்கவும். துருவநட்சத்திரம் திரைக்குக் கொண்டு வர முடியவில்லை. எங்களால் முடிந்த அளவு முயற்சித்தோம்.

Vikram
Vikram

எங்களுக்கு இன்னும் ஒரு சில நாள்கள் தேவை என்று தோன்றுகிறது. இந்தப்படம் சிறந்த அனுபவத்தை தரும் என நம்புகிறோம். உங்கள் ஆதரவு எங்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. விரைவில் திரைக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

படத்தில் விக்ரம் உடன் இணைந்து ரிது வர்மா, பார்த்திபன், ராதிகா, சிம்ரன், விநாயகன் உள்பட பலர் நடித்துள்ளனர். சூர்யா முக்கிய கேரக்டரில் நடித்ததாக சொல்லப்பட்டது.

ஆனால் அது கிடப்பில் போடப்பட்டதாகத் தெரிகிறது. இது பயங்கரவாத அமைப்புகளை ரகசியமாக ஒழிப்பதில் பணிபுரியும் தி பேஸ்மெண்ட் எனப்படும் உயரடுக்கு நிபுணர் குழுவின் தலைவராக இருக்கும் ஜானைச் சுற்றி கதை நகர்கிறது.

இதையும் படிங்க… 25 வருடங்களுக்கு பிறகு இணையும் ஏ. ஆர். ரஹ்மான்- பிரபுதேவா… படத்தின் முதல் போஸ்டர் வெளியீடு…

இது 2 பாகங்களாக வெளியாகிறது. அடுத்ததாக விக்ரம் நடித்து வரும் தங்கலான் படமும் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது. இதுவும் கடந்த ஜனவரியில் ரிலீஸ் ஆவதாக சொல்லப்பட்டு பின் தேதி தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...