25 வருடங்களுக்கு பிறகு இணையும் ஏ. ஆர். ரஹ்மான்- பிரபுதேவா… படத்தின் முதல் போஸ்டர் வெளியீடு…

பிரபுதேவா தமிழ் சினிமாவின் நடிகர், நடன இயக்குனர், திரைப்பட இயக்குனர் என பன்முகங்களைக் கொண்டவர். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் பணியாற்றி உள்ளார். கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் பணியாற்றி வருகிறார்.

1990 மற்றும் 2000 களில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் பிரபுதேவா. தனது உடலை ரப்பர் போல் வளைத்து ஆடும் திறமையால் மக்களை கவர்ந்தவர் பிரபுதேவா. 2000 களுக்கு பிறகு அவரது படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. அதனால் படங்களை இயக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினார். ஆனாலும் சில துணை கதாபாத்திரங்களில் நடித்தும் வந்தார்.

11 வருட இடைவேளைக்குப் பிறகு 2016 ஆண்டு வெளியான ‘தேவி’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். தற்போது இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் நடன கலைஞரும், நடிகருமான பிரபுதேவா ஆகிய இருவரும் 25 வருடங்கள் கழித்து புதிய படம் ஒன்றில் இணைய உள்ளனர். இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.

இந்தப்படத்திற்கு ARRPD6 என்று பெயரிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரையும் நடிகர் பிரபுதேவா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானும் நடிகர் பிரபுதேவாவும் இறுதியாக இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள், 1994 ஆம் ஆண்டு வெளியான ‘காதலன்’ மற்றும் 1997 ஆம் ஆண்டு வெளியான ‘மின்சார கனவு’ ஆகிய படங்கள் ஆகும்.

இந்த பிரஸ்ட் லுக் போஸ்டரில் ஒரு முகமில்லாத ஆடை மட்டும் இருக்க கூடிய நடன கலைஞரின் கோட் சூட் மற்றும் மைக்கேல் ஜாக்சன் தொப்பியுடன் இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். மனோஜ் என். எஸ். இப்படத்தை இயக்குகிறார். மேலும், யோகி பாபு, அஜூ வர்கீஸ், அர்ஜுன் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தின் கதையம்சம் ஒரு நடன கலைஞரின் வாழ்க்கையை சுற்றி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.