குபேரா படத்திற்காக நானும் ராஷ்மிகாவும் குப்பை கிடங்கில் இறங்கினோம்… மனம் திறந்த தனுஷ்…

தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தற்போது வளர்ந்து வரும் பிரபலமான இயக்குனராக இருக்கிறார். இவரது தந்தை கஸ்தூரிராஜா தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் இவரது சகோதரர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும்…

dhanush

தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தற்போது வளர்ந்து வரும் பிரபலமான இயக்குனராக இருக்கிறார். இவரது தந்தை கஸ்தூரிராஜா தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் இவரது சகோதரர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் இருந்து வருகிறார்.

2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் தனுஷ். ஆரம்பத்தில் இவரது தோற்றத்திற்காக மிகவும் கேலி கிண்டலுக்கு உள்ளானார். ஆனால் அதையும் தாண்டி தற்போது பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார்.

இயக்குனராக தற்போது புது அவதாரம் எடுத்துள்ள தனுஷ் சமீபத்தில் ராயன் என்ற திரைப்படத்தை இயக்கினார். அது நூறு கோடி வசூலை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். ஆனால் இது எதிர்பார்த்த அளவு போகவில்லை. அடுத்ததாக தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை மற்றும் அவர் நடிப்பில் குபேரா ஆகிய திரைப்படங்கள் வெளிவர இருக்கிறது.

இந்நிலையில் குபேரா திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷ், அந்த படத்திற்காக தான் பட்ட கஷ்டங்களைப் பற்றி பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், நானும் ராஷ்மிகாவும் குபேரா படத்தில் வரும் ஒரு காட்சிக்காக ஒரு நாள் முழுவதும் குப்பை கிடங்கில் இறங்கி நடித்தோம். கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் அந்த காட்சிக்கான படப்பிடிப்பு நடந்தது. அது எனக்கு வேறொரு வாழ்க்கையை காண்பித்தது என்று பகிர்ந்து இருக்கிறார் தனுஷ்.