தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தற்போது வளர்ந்து வரும் பிரபலமான இயக்குனராக இருக்கிறார். இவரது தந்தை கஸ்தூரிராஜா தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் இவரது சகோதரர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் இருந்து வருகிறார்.
2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் தனுஷ். ஆரம்பத்தில் இவரது தோற்றத்திற்காக மிகவும் கேலி கிண்டலுக்கு உள்ளானார். ஆனால் அதையும் தாண்டி தற்போது பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார்.
இயக்குனராக தற்போது புது அவதாரம் எடுத்துள்ள தனுஷ் சமீபத்தில் ராயன் என்ற திரைப்படத்தை இயக்கினார். அது நூறு கோடி வசூலை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். ஆனால் இது எதிர்பார்த்த அளவு போகவில்லை. அடுத்ததாக தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை படம் வெளிவர இருக்கிறது. தற்போது தனுஷ் நடித்த குபேரா திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் குபேரா திரைப்படம் வெளியான 4 நாட்களிலேயே 100 கோடி வசூலை தாண்டி இருக்கிறது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் தனுஷ் என்று கூறுகிறார்கள். குபேரா படம் மட்டுமல்லாமல் தனுஷின் திருச்சிற்றம்பலம், வாத்தி, ராயன் என தொடர்ந்து நான்கு படங்களும் 100 கோடி வசூலை தாண்டி இருக்கிறது. இதனால் தனுஷ் மீதான எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் சினிமா ரசிகர்களிடையே கூடியிருக்கிறது என்று சொல்லலாம். மேலும் தெலுங்கு சினிமா இண்டஸ்ட்ரியல் தனுஷ் குபேரா படத்தின் மூலம் மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.