அடப்பாவிகளா? ’ஓ சொல்றியா மாமா’ பாடலை அப்படியே காப்பியடித்த துருக்கி பாடகி.. கேஸ் போடுவாரா தேவிஸ்ரீ பிரசாத்?

  அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா: தி ரைஸ்’ திரைப்படத்தில் இடம்பெற்ற, சமந்தா அதிரடி நடனத்துடன் கூடிய ‘ஓ சொல்றியா மாமா ஓஓ சொல்றியா மாமா’ பாடல், 2021ஆம் ஆண்டு வெளியானதில் இருந்து…

oo solriya

 

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா: தி ரைஸ்’ திரைப்படத்தில் இடம்பெற்ற, சமந்தா அதிரடி நடனத்துடன் கூடிய ‘ஓ சொல்றியா மாமா ஓஓ சொல்றியா மாமா’ பாடல், 2021ஆம் ஆண்டு வெளியானதில் இருந்து இன்று வரை ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த மெகா ஹிட் பாடலுக்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத் துருக்கிப் பாடகி அதியே (Atiye) மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதியே தனது சமீபத்திய பாடலான ‘அன்லாயனா’ பாடலில், ‘ஓ சொல்றியா’ பாடலின் இசையை அப்பட்டமாக காப்பி அடித்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கலாமா என்றும் அவர் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

ஒரு நிகழ்ச்சியில் பேசிய டி.எஸ்.பி, “‘புஷ்பா’வின் ‘ஓ சொல்றியா’ பாடலை பலரும் பல்வேறு வழிகளில் ரசித்தனர். ஆனால், இப்போது அது ஒரு துருக்கி பாடலில் காப்பி அடிக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. பாடகி அதியேவின் பதிப்பில் பல ஒற்றுமைகள் உள்ளன. இதை அப்பட்டமான காப்பி என்றே சொல்ல வேண்டும்,” என்று தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

மேலும், “இது நமது இசைக்கு சர்வதேச அளவில் இருக்கும் வரவேற்புக்கு ஒரு எடுத்துக்காட்டு,” என்று பெருமையுடன் கூறிய அவர், “அவர்கள் மீது வழக்கு தொடர்வது பற்றி நான் ஆலோசித்து வருகிறேன். ஆனாலும், எங்கள் பாடல் காப்பி அடிக்கப்பட்டது எனக்கு பெருமைதான்,” என்றும் குறிப்பிட்டார்.

பொதுவாக வெளிநாட்டு பாடலை தான் நம்மூர் இசையமைப்பாளர்கள் காப்பி அடிப்பார்கள் என்று குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில் நம்மூர் இசையமைப்பாளர் ஒருவரின் பாடலை வெளிநாட்டவர் ஒருவர் காப்பி அடித்திருக்கிறார் என்பது ஆச்சரியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த பாடலை கேட்கும் போது அச்சு அசலாக ’ஓ சொல்றியா’ என்ற பாடல் போல் தான் இருக்கிறது என்றும் தேவிஸ்ரீ பிரசாத் தாராளமாக வழக்கு தொடரலாம் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

மொத்தத்தில் சமந்தாவின் இந்த பாடல் இந்தியாவை மட்டும் இன்றி அகில உலகத்தையும் கவர்ந்து உள்ளது என்பது இந்த காப்பி பாடன் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த காப்பி மாடலின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பாடலை கேட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..

https://x.com/Sylvesterfredy/status/1939391615032008724