கடந்த 2001-ல் மனதைத் திருடிவிட்டாய் படத்தின் மூலம் தனது குருநாதருக்கே நடனம் சொல்லிக் கொடுத்து நடன இயக்குநராக அறிமுகமானவர் தான் டான்ஸ் மாஸ்டர் தினேஷ். உதவி நடன இயக்குநராக ஏராளமான படங்களில் வேலை செய்தவர் பின் டான்ஸ் மாஸ்டராக உயர்ந்து பல திரைப்படங்களுக்கு நடனம் அமைத்து வருகிறார்.
பெரும்பாலும் விஜய்யின் பல படங்களில் டான்ஸ் மாஸ்டர் இவரே.அவருடன் தமிழன், யூத், போக்கிரி, வில்லு என கடைசியாக வெளியான லியோ வரை பணிபுரிந்துள்ளார். மேலும் ஒரு சில பாடல்களில் தோன்றி நடித்தும் ஆடியுள்ளார்.
இந்நிலையில் இவர் ஹீரோவாக நடித்து வெளியான படம் தான் ஒரு குப்பைக் கதை. கடந்த 2018-ல் வெளியான இப்படத்தில் ஹீரோயினாக மனீஷா யாதவ் நடித்திருப்பார். காளி ரங்கசாமி இப்படத்தினை இயக்கியிருப்பார். சென்னையின் சேரியில் பிறந்து வளர்ந்து சுகாதாரப் பணியாளராக வேலை செய்யும் தினேஷ்-க்கு பெண் பார்க்கும் படலம் நடைபெறும் போது அவர் குப்பை அள்ளுபவர் என வரன்கள் தள்ளிப்போக, பின் மனீஷா யாதவ்-ஐ திருமணம் முடிக்கிறார்.
ஒரங்கட்டப்பட்ட கவுண்டமணி.. ரஜினி, கமலுக்கே டஃப் கொடுத்த சம்பவம்..
ஒரு கட்டத்தில் மனீஷா யாதவ்-க்கு பிளாட்டில் வசிக்கும் சுஜோ மேத்யூவுடன் பழக்கம் ஏற்பட்டு கைக்குழந்தையுடன் அவருடன் செல்கிறார். அவரும் ஒரு கட்டத்தில் கழட்டி விட மீண்டும் மனீஷாவை தினேஷ் மாஸ்டர் கரம் பிடிப்பது போல் எடுக்கப்பட்டிருக்கும்.
இந்தப் படத்திற்காக தினேஷ் மாஸ்டர் நிஜமாகவே சேரிப் பகுதிகளில் வசிக்கும் மக்களுடன் சென்று அவர்களின் அன்றாட நடவடிக்கைகளைப் பழகி, பின் அவர்களைப் போலவே சுகாதாரப் பணியாளராக வேலைசெய்து குப்பைகளை அள்ளியிருக்கிறார். மேலும் தொற்று ஏற்படாவண்ணம் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டு அப்படத்தில் குப்பை அள்ளும் பணியாளராக நடித்தார்.
ஒரு குப்பைக் கதை படத்தைப் பார்க்க தினேஷ் மாஸ்டர் தனது மனைவியை அழைத்திருக்கிறார். ஆனால் அவரோ அப்படத்தில் வந்த ஒரே ஒரு பாடலைப் பார்த்து தன் கணவன் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறாரே என வருந்தி அந்தப் படத்தையே பார்க்கவில்லையாம். இந்தப் படம் ரிலீஸ் ஆன போது அப்பகுதி மக்களை அழைத்துச் சென்று முதல் காட்சியை பார்க்க ஏற்பாடு செய்திருந்தார் தினேஷ் மாஸ்டர்.