ஒரங்கட்டப்பட்ட கவுண்டமணி.. ரஜினி, கமலுக்கே டஃப் கொடுத்த சம்பவம்..

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களையே ஒரு காமெடி நடிகர் மிரள வைத்தார் என்றால் அது நம் கவுண்டர் கிங் கவுண்டமணி தான். 16 வயதினிலே படத்தில் ரஜினியுடன் “பத்த வச்சுட்டியே பரட்ட..” என்று வசனம் பேச ஆரம்பித்தவர் அன்று முதல் இன்று வரை இவர் கலாய்க்காத ஹீரோக்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தமிழ் சினிமாவின் முடிசூடா காமெடி கிங் ஆக விளங்கியவர்.

அதிலும் செந்திலுடன் இவர் நடித்து வெற்றி பெற்ற படங்கள் ஏராளம். ஒருகட்டத்தில் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களில் கதை முக்கியமல்ல கவுண்டமணி செந்தில் காம்பினேஷன் இருந்தாலே போதும் படம் நிச்சயம் ஹிட் என்பதை உணர்ந்திருந்தனர். அந்த அளவிற்கு இவர்களின் காம்போ திரையில் பெரிய மாயாஜாலத்தினையே நிகழ்த்தியது.

இது பெரிய பெரிய சூப்பர் ஸ்டார் படங்களுக்கும் பொருந்தும். ரஜினியுடனும், கமல்ஹாசனுடனும் நிறைய படங்களில் இருவருமே நடித்துள்ளனர். ஒருகட்டத்திற்குப் பிறகு கவுண்டமணி, செந்தில் ஆகிய இருவரும் தனித்தனியாக நடிக்க ஆரம்பித்தனர். எனினும் கவுண்டமணி தனியாக ஹீரோக்களுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி ஹிட்டான அளவிற்கு செந்தில் தனியாக காமெடி செய்த படங்கள் சரியாக ஓடவில்லை. திரையில் இவர்கள் இருவரது காம்பினேஷனையை ரசிகர்கள் பெரிதும் விரும்பினர். கரகாட்டக்காரன், சின்னக் கவுண்டர், எஜமான், வைதேகி காத்திருந்தாள், இந்தியன் என உதாரணமாக ஏராளமான படங்களைக் குறிப்பிடலாம்.

இப்படி கவுண்டமணி தனியாக ரஜினி, கமல் உள்ளிட்ட ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். அதில் மன்னன், உழைப்பாளி போன்ற படங்களில் ரஜினிக்கும், சிங்கார வேலன், மகாராசன் போன்ற படங்கள் கமலுக்கும் பெரிய வெற்றியைக் கொடுத்தன. இந்தப் படங்களில் கவுண்டமணி ரஜினி, கமலை ஓவராக கலாய்த்திருப்பார். மேலும் சில காட்சிகளில் அவர்களையே ஓவர்டேக் செய்து விடுவார்.

தலைகீழாக நிற்கச் சொன்ன பாலா.. மிரண்டு போன ஆர்யா.. நான் கடவுள் கதாபாத்திரம் உருவான விதம்

இதனால் இவ்விரு ஹீரோக்களும் கவுண்டமணி இவ்வாறு நம்மை படங்களில் கலாய்ப்பதைக் கவனித்து அவரை ஓரங்கட்ட ஆரம்பித்தனர். மேலும் தங்கள் படங்களில் ஜனகராஜ், செந்தில் ஆகியோரை நடிக்க வைத்தனர். இதனால் ஒரு குறிப்பிட்ட படங்களுக்குப் பிறகு கவுண்டமணி இருவருடனும் சேர்ந்து நடிப்பதை அவர்கள் விரும்பாததால் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் மாற்று நடிகர்களைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆனால் கவுண்டமணி அடுத்து சத்யராஜ், கார்த்திக், பிரபு, அர்ஜுன் போன்றோருடன் நடித்து அடுத்த ரவுண்ட் வர ஆரம்பித்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...