உலகநாயகன் கூட நடிக்கிறது மிகப்பெரிய பெருமை. வாய்ப்பு வந்தா நடிக்கலாம்… யோகிபாபு சொல்றதைக் கேளுங்க

Published:

தமிழ்த்திரை உலகில் தற்போதைய காமெடி கிங் யோகிபாபு தான். இவருடைய கர்லிங் ஹேர் தான் இவருக்கு அடையாளம். உருவத்தில் அல்ல நடிப்பு. எப்படிப்பட்ட உருவமானாலும் அதைக் கொண்டு பளிச்சிட வைப்பது தான் நடிகனின் திறமை என நிரூபித்துக் காட்டியவர் இவர்.

பாட்டு, டான்ஸ், ஆக்ஷன், ஹீரோ, எமோஷன், சென்டிமென்ட் என எதைக் கொடுத்தாலும் வெளுத்து வாங்கும் காமெடி நடிகர் யோகிபாபு. இதுபற்றி யோகிபாபு என்ன சொல்கிறார்?

சிரிப்பு காட்டுறவனுக்கு எதுக்குடா சிக்ஸ்பேக்… காமெடி தான் பிடிக்கும். கடைசி காலம் வரும் வரைக்கு சோறு போடறது அதுதான். அது போதும். நமக்கு என்ன வருமோ அதைப் பண்ணுவோம். நல்ல கதைகள் வரும்போது அதைப் பண்ணுவோம்.

Rajnikanth with Yogi babu 1
Rajnikanth with Yogi babu

கஷ்டப்பட்டா நாம முன்னேறிக்கிட்டுப் போய்க்கிட்டே இருக்கலாம். இன்னியோட 300 படத்தைக் கிராஸ் பண்ணிட்டோம். கஷ்டப்பட்டா முழு பலனும் கிடைச்சிடும்.

எனக்கு என் வாழ்க்கைல ஏற்றக் குறைவு எதுவுமே தெரில. அது நம்ம வாழ்க்கையில இருந்தாலே போதும்.

பொம்மை நாயகி கதைல டீ கடை வேலு. அவருக்கு ஒரு பொண்ணு. அந்தப் பொண்ணுக்கு ஒரு பிரச்சனை. கடைசியில எப்படி அவரு முடிவு எடுக்கிறாரு. அதான் கதை. அது எனக்குப் பிடிச்சிருந்தது.

வேலை மேல நம்ம கவனம் இருந்துக்கிட்டே இருக்கணும். நம்ம நல்லாருக்கணும். நம்ம சுத்தி எல்லாரும் நல்லா இருக்கணும்னா உழைச்சித் தான் ஆகணும்.

நாம நடந்துக்கறதைப் பொறுத்துத் தான் நம்மோட நண்பர்கள் வருவாங்க. ரமேஷ், ஜி.வி.பிரகாஷ், கருணாகரன், பா.ரஞ்சித், ஷியாம் ஆண்டன் எல்லாருமே நல்ல நண்பர்கள் தான்.

எங்க அம்மா சொல்றது எனக்கு மறக்க முடியாத பாராட்டு. என்னடா பண்ணிருக்க. 35 வருஷங்களுக்கு முன்னாடி நீ கிடைச்சிருந்தேன்னா நான்லாம் உன்ன வேற மாதிரி ஆக்கிருப்பேன்டான்னு பாரதிராஜா சொன்னாரு.

yogi babu 1
yogi babu

எங்க அம்மாவுக்கு பணம் காசு சம்பாதிக்கறதை எல்லாம் தாண்டி என் பையன் இன்னைக்கு கல்யாணம் பண்ணி புள்ளைக்குட்டிகளோட செட்டில் ஆயிட்டான்னு பார்க்கும் போது நிம்மதியா தான் இருக்காங்க.

ஆட்டோன்னா எந்த சந்துக்குள்ளனாலும் போயி தான் ஆகணும். நடிகன்னா எதுவேணாலும் நடிச்சித்தான் ஆகணும். ஹாலிவுட்ல வாய்ப்பு வந்தா அதையும் நடிப்போம்.

அஜீத் சார், விஜய் சார் ரெண்டு பேருமே தன்னடக்கம் தான். ஆடியன்ஸ்க்கு என்ன படம் கொடுக்கணுமோ கரெக்டா கொடுப்பாங்க. ரெண்டு பேருமே ஈக்குவல் தான். ரஜினி சார் கூட நடிக்கிறது பெரிய அனுபவம். தர்பார், ஜெயிலர்னு படம் நடிச்சிருக்கேன். அவங்க எல்லாம் என்ன உயரத்துல இருந்தாலும் தன்னடக்கத்தோட இருக்காங்க.

உலகநாயகன் கமல் சார் கூட நடிக்கிறது மிகப்பெரிய பெருமை. அவரு கூட நடிக்க வாய்ப்பு வந்தா பண்ணுவோம். யாரையும் பார்த்துப் பொறாமைப் படாதே. உன் வேலையை நீ பாரு. இதுதான் வாழ்க்கையோட சக்சஸ்.

 

 

மேலும் உங்களுக்காக...