காமெடி நடிகராகி, அப்துல் கலாம் உதவியாளரானவர்.. ‘ஓட்டேரி நரி’யை ஞாபகம் இருக்கிறதா?

தமிழ் திரை உலகில் காமெடி நடிகராக அறிமுகமாகி அதன் பின்னர் அப்துல் கலாமின் உதவியாளராக பல ஆண்டுகள் இருந்து தற்போது தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வகுப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றால் அவர்தான் நடிகர் தாமு.

நடிகர் தாமு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே மிமிக்ரி செய்வதில் வல்லவராக இருந்தார். அப்போதுதான் அவர் ஒரு மிமிக்ரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தபோது பாலச்சந்தர் அந்த நிகழ்ச்சியை பார்க்க வந்தார். அவருக்கு பாலச்சந்தரிடம் இருந்து பாராட்டு கிடைத்ததாகவும் கூறப்பட்டது.

குபீர் சிரிப்பு குமரிமுத்து.. தமிழ் சினிமா சரியாக பயன்படுத்தாத அற்புத கலைஞன்..!

இதனையடுத்து தனது நண்பரான இயக்குனர் வசந்த்திடம் தன்னை பாலச்சந்தரிடம் அறிமுகம் செய்து வையுங்கள் என்று கேட்டிருக்கிறார். அவரும் தாமுவை பாலச்சந்தர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கே பாலச்சந்தருடன் சந்திப்பு நடந்தது. கண்டிப்பாக உனக்கு எனக்கு என்னுடைய படத்தில் வாய்ப்பு தருகிறேன் என்று அவர் வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை அவர் ‘வானமே எல்லை’ என்ற திரைப்படத்தில் காப்பாற்றினார்.

dhamu1

இந்த படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் தாமு நடித்தாலும் அவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இதனை அடுத்து இரண்டாவது படமாக விஜய் நடித்த முதல் படமான ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு மீண்டும் பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ‘ஜாதி மல்லி’, ஷங்கர் இயக்கத்தில் உருவான ‘காதலன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

தாமு நடித்த கேரக்டர்களில் மிகவும் பிரபலமானது ஓட்டேரி நரி கேரக்டர் தான். விஜய், த்ரிஷா நடித்த கில்லி திரைப்படத்தில் இந்த கேரக்டரில் நடித்திருந்தார். அதன் பிறகு விஜய்யுடன் ஆதி, போக்கிரி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

dhamu2

இந்த நிலையில்தான் தாமுவின் மிமிக்ரி நிகழ்ச்சியை பார்க்க அப்துல் கலாம் வந்திருந்தார். அவருடைய திறமையை பார்த்து அசந்து போனவர் அவரை தனியாக அழைத்து பேசினார். உன்னிடம் இருக்கும் திறமைக்கு நீ நடிகராக இருக்க வேண்டாம், என்னுடன் வந்து விடு, உனக்கு பயிற்சி தந்து உன்னை பெரிய ஆளாக்குகிறேன் என்றார். அப்துல் கலாமின் வார்த்தையை தட்டாமல் திரை உலகை விட்டு விலகி அப்துல் கலாமின் உதவியாளராக சேர்ந்தார்.

கவுண்டமணியை ஓரங்கட்ட கமல், ரஜினி கொண்டு வந்த காமெடி நடிகர்.. இப்போது அமெரிக்காவில் செட்டில்..!

அவருக்கு மாணவர்களுக்கு எப்படி பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும், ஆசிரியர்களுக்கு எப்படி பயிற்சி அளிக்க வேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் இன்று வரை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்து கொண்டிருக்கிறார்.

அப்துல்கலாமிடம் மட்டும் சுமார் 6 வருடங்கள் உதவியாளராக இருந்த அவர், அப்துல் கலாம் மறைவுக்கு பின்னர் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். கற்க கசடற என்ற இதழையும் நடத்தி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

dhamu3

அரசியலுக்கு வந்து மண்ணை கவ்விய நடிகர்கள்.. விஜய்க்கு வெற்றி கிடைக்குமா?

இனிமேல் சினிமாவில் நடிக்க போவதில்லை என்றும் சமுதாயத்தில் நல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பதே தனது கொள்கை என்றும் இந்த கொள்கையை வைத்துக்கொண்டு என்னால் சினிமாவில் சிகரெட் பிடித்துக் கொண்டு, குடித்துக் கொண்டு நடிக்க முடியாது என்றும் அவர் கூறினார். அப்துல் கலாமின் கனவை நினைவாக்குவது தான் தனது கடமை என்றும் அவர் கூறினார். நடிகர் தாமுவுக்கு சுகந்தி என்ற மனைவியும் சரோஜா, சுசீலா என்ற இரட்டை பெண் குழந்தைகளும் உள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...