இராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியை சேர்ந்தவர் சுந்தர். இவர் சிறுவயதில் இருந்து மோர்சிங் வாசிக்க கற்றுக்கொண்டிருக்கிறார். மிகச்சிறிய இசைக்கருவியான இக்கருவி மிக பழமையான கருவி சரியாக வாசிக்க தெரியாமல் இதை கையாளும்போது ஆபத்தை விளைவிக்கும் கருவியாகும்.

இந்த கருவியை சிறுவயதில் இருந்து வாசித்தும் அசத்தும் சுந்தர், சசிக்குமார் நடிக்கும் பொன்ராம் இயக்கும் எம்.ஜி.ஆர் மகன் படத்தில் ஒரு பாடலுக்கு வாசித்துள்ளாராம். மிக திறமையான இந்த காலத்தால் அழியாத மோர்சிங் கருவியை வாசிக்கும் சுந்தரை சமுத்திரக்கனி மற்றும் சசிக்குமார் பாராட்டியுள்ளனர்.