தமிழ்சினிமாவில் தனக்கென தனி முத்திரையைப் பதித்து வருபவர் இயக்குனர் மிஷ்கின். இவர் சமீபத்தில் பாட்டல் ராதா படத்தின் ஆடியோ லாஞ்சில் பேசிய பேச்சு ரொம்பவே சர்ச்சையை உண்டாக்கியது. குடிகாரர்களுக்கான விழிப்புணர்வைப் பற்றி எடுத்த இந்தப் படத்திற்கான விழாவிற்கு வந்தவர்களை எல்லாம் இங்கு ரெண்டு பேரைத் தவிர எல்லாரும் குடிகாரர்கள்தான் என்று கேட்டார்.
அதிலும் தான் ராவாக குடிப்பேன் என்றும் குடிக்கிறதுக்கு ஆதரவு தருவது போல பலவாறாக வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி இருந்தார். இதுல சென்னையின் கெட்ட வார்த்தைகளையும் திணித்து விட்டார். இதை சமூகவலைதளங்களில் பலரும் வரிந்து கட்டிக்கொண்டு மிஷ்கினைப் பொளந்து கட்டினர்.
சமீபத்தில் ஒரு படத்தின் ஆடியோ லாஞ்சில் மிஷ்கின் பேசிய வார்த்தைகள் தவறா இருந்தாலும் அவர் பேசின கருத்துக்கள் சரிதான். ஆனாலும் மிஷ்கின் இப்படித் தொடர்ந்து பேசுறது வெறும் பரபரப்புக்குத் தானான்னு ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் அளித்த பதில் இதுதான்.

பரபரப்புக்காக எதையும் பேச வேண்டிய அவசியம் மிஷ்கினுக்கு இருப்பதாக எனக்குத் தெரியல. தன் மனதுக்கு என்ன தோணுகிறதோ அதைத்தான் மிஷ்கின் பெரும்பாலும் மேடையில் பேசுவார். பேச்சின்போது கண்ணியத்தைக் காத்தார் என்றால் நல்லாருக்கும். இப்போது அது இல்லாததால்தான் அவரது பேச்சு கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாயிருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பாட்டல்ராதா படம் வெளியாகி உள்ளது. குருசோமசுந்தரம், சஞ்சனா நடராஜன் நடித்துள்ள இந்தப் படத்திற்கு பாசிடிவான விமர்சனங்கள் வந்துள்ளன. ஆனாலும் சில கலவையாகவும் வந்துள்ளன.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


