இனி யாருடைய பயோபிக்குக்கு மாஸ்? பிரபலம் சொல்லும் அந்த மூவர் யார்?

நடிகை சாவித்திரி, ஜெயலலிதாவின் பயோபிக்குகள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்போது இளையராஜாவின் பயோபிக் உருவாகி வருகிறது. அந்த வகையில் இன்னும் யாருடைய பயோபிக் வந்தால் நல்லாருக்கும்னு பார்க்கலாமா… தமிழ் சினிமா ஆளுமைகளைப் பற்றிய…

savithiri, ilaiyaraja biopic

நடிகை சாவித்திரி, ஜெயலலிதாவின் பயோபிக்குகள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்போது இளையராஜாவின் பயோபிக் உருவாகி வருகிறது. அந்த வகையில் இன்னும் யாருடைய பயோபிக் வந்தால் நல்லாருக்கும்னு பார்க்கலாமா…

தமிழ் சினிமா ஆளுமைகளைப் பற்றிய பயோபிக் ரொம்பவே குறைவா வந்துருக்கு. அந்த வகையில உங்களது கருத்துப்படி எந்தத் திரை ஆளுமைகளின் வாழ்க்கையைப் படமா எடுக்கணும்? அல்லது அதுல யாரு நடிக்கணும்னு ஆசைப்படறீங்கன்னு ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

kalaignar, mgr, sivaji
kalaignar, mgr, sivaji

கலைஞர், எம்ஜிஆர், சிவாஜி ஆகிய மூவரின் திரை வாழ்க்கையுமே பல சுவையான திருப்பங்களைக் கொண்டது. அதனால இவர்களது வாழ்க்கையை பயோபிக்காக எடுத்தால் நிச்சயமாக மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும். என்ன பிரச்சனைன்னா இவங்க வாழ்க்கை வரலாற்றை எடுக்கக் கொஞ்சம் கூடுதலாகப் பொருள்செலவு ஆகும்.

அதைப் பொருட்படுத்தாமல் எடுக்கக்கூடிய நல்ல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் கிடைத்து விட்டார்கள் என்றால் நிச்சயமாக தமிழ்சினிமாவுக்கு நிச்சயமாக வரவேற்பைப் பெறக்கூடிய பயோபிக்காக இந்த மூன்றுமே அமையும் என்பதுதான் என்னுடைய கருத்து. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பயோபிக் என்பது ஒருவருடைய வாழ்க்கை வரலாறு. அதுல உள்ள பிளஸ் பாயிண்டை மட்டும் எடுக்காமல் மைனஸ்களையும் எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால்தான் அது உண்மையான பயோபிக். ஆனால் அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள். அதனால்தான் பல பயோபிக்குகள் வெளிவராமல் உள்ளது. இன்னொரு விஷயம் அந்தப் பயோபிக்கில் நடிக்க சரியான நடிகர், சரியான இயக்குனர், தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும்.