நீண்ட இடைவெளிக்கு பின் மகளுடன் நடிக்கும் அருண்பாண்டியன்

By Staff

Published:

387f901b8035a2e357defced5ffef73e

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் நீண்ட இடைவெளிக்கு பின் தனது மகள் கீர்த்தி பாண்டியனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அருண் பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் அப்பா மகளாகவே நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ஹெலன் என்ற படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் தான் அருண் பாண்டியனும் கீர்த்தி பாண்டியன் மகளாக நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தை கோகுல் என்பவர் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தை இயக்கியவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது ஒரு சில இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்

Leave a Comment