வாய்ப்புக் கிடைத்தும் ஜொலிக்காமல் போன அங்காடித் தெரு ஹீரோ.. இதெல்லாம் இவர் நடிக்க வேண்டியதா?

சினிமாவில் வாய்ப்புத் தேடி தினமும் சென்னை நோக்கி படையெடுப்பவர்கள் ஏராளம். ஒருமுறை வாய்ப்புக் கிடைத்து விட்டால் அதன் மூலம் அவர்களது வாழ்க்கையே நல்ல நிலைமைக்குச் சென்று விடுகிறது. ஆனால் சிலர் வாய்ப்புக் கிடைத்தும் அதனைச்…

Angadi Theru Mahesh

சினிமாவில் வாய்ப்புத் தேடி தினமும் சென்னை நோக்கி படையெடுப்பவர்கள் ஏராளம். ஒருமுறை வாய்ப்புக் கிடைத்து விட்டால் அதன் மூலம் அவர்களது வாழ்க்கையே நல்ல நிலைமைக்குச் சென்று விடுகிறது. ஆனால் சிலர் வாய்ப்புக் கிடைத்தும் அதனைச் சரியாகப் பயன்படுத்தாமல் இறுதியில் மீண்டும் பழைய நிலைக்கே வந்து விடுகிறார்கள். இப்படி தனக்கு முதல் படமே சூப்பர் ஹிட் படமாக அமைந்தும், அடுத்தடுத்து கதைத் தேர்வுகளால் தோல்வியைச் சந்தித்து இன்று பட வாய்ப்புகளே இன்றி தவிக்கும் நடிகர் தான் அங்காடித் தெரு பட ஹீரோ மகேஷ்.

முதல் படமே அஞ்சலி ஜோடி, வசந்தபாலன் இயக்கம், ஜி.வி.பிரகாஷ்குமார் இசை. இப்படி அனைத்தும் நல்ல முறையில் இருந்தும் நடிகர் மகேஷ் அடுத்தடுத்து படங்களில் நடிக்கவில்லை. 2010-ம் ஆண்டில் வெளியான அங்காடித் தெரு திரைப்படம் அப்போது சமூகத்திலும், சினிமாத்துறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

பெரிய பெரிய ஜவுளிக்கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் மறுபக்கத்தினை தோலுரித்துக் காட்டியது. கடை மேலாளராக இயக்குநர் வெங்கடேஷ் மிரட்டியிருப்பார். அஞ்சலியின் குடும்பப்பாங்கான முகமும், வசந்தபாலனின் வசனங்களும், நா.முத்துக்குமாரின் பாடல்களும் படத்தினை வெற்றி பெறச் செய்தது.

இப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அடுத்து ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்ட்ட நடிகர் மகேஷுக்கு காத்திருந்தது தோல்வி மட்டுமே. அங்காடித் தெரு வெற்றியால் அடுத்தடுத்து நிறைய இயக்குநர்கள் அவரை அணுகினர். இதனால் எந்தப் படத்தினைத் தேர்ந்தெடுப்பது என்று குழம்பிய நிலையில் இருந்தார்.

Bigg Boss Tamil Season 8 Day 104: கனத்த இதயத்துடன் வெளியேறிய முன்னாள் போட்டியாளர்கள்… 

மேலும் வலுவான கதைக்களத்தையும் அவர் தேர்வு செய்யவில்லை. முதல் படத்தில் வசந்தபாலன் மகேஷுக்கு அனைத்தும் சொல்லிக் கொடுத்ததால் கதை என்னவென்றே தெரியாமல் நடித்தார். ஆனால் அங்காடித் தெரு வெற்றியை அவருக்குத் தக்க வைத்துக் கொள்ளத் தெரியவில்லை.

அந்த நேரத்தில் ரிலீஸ் ஆன விஜய் சேதுபதி முதலில் ஹீரோவாக நடித்த சீனு ராமசாமியின் தெற்மேற்குப் பருவக் காற்று திரைப்படம் முதலில் மகேஷுக்கு வந்த வாய்ப்பே. அந்த வாய்ப்பினை இழந்தவருக்கு அடுத்து வந்த படமான எங்கேயும் எப்போது படத்தில் ஷர்வான் கதாபாத்திரமும் இவருக்குச் சொல்லப்பட்டதே. இதனையும் இழந்தார்.

அந்த ஒரு இடம் தான் ஷேப்பா இருக்கணும்.. மாதம் 3 லட்ச ரூபாய்க்கு பிட்னஸ் ட்ரெயினர்.. அரண்டு பார்க்க வைத்த பெண்..

பின் அதர்வாவை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிய ஈட்டி திரைப்படமும் முதலில் அங்காடித் தெரு மகேஷுக்கு வந்ததே. இப்படி பல சூப்பர் ஹிட் படங்களை இழந்திருக்கிறார் மகேஷ். இதனால் மன உளைச்சலுக்கு ஆளானவர் குடிப்பழக்கத்திற்கும் அடிமையானார். பின் கஞ்சா கருப்பு தயாரித்த வேல்முருகன் போர்வெல்ஸ் திரைப்படம் படுதோல்வி அடைய சினிமாவிலிருந்தே ஓரங்கட்டப்பட்டார் மகேஷ். தற்போது மீண்டும் நல்ல வாய்ப்பிற்காக காத்திருக்கிறார்.