Bigg Boss Tamil Season 8 Day 104 மிகவும் எமோஷனலாக சென்றது. முன்னாள் போட்டியாளர்கள் அனைவரும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக வீட்டுக்குள் வந்தனர் இன்று கனத்த இணையத்துடன் அனைவரும் வெளியேறினார். அவர்கள் வெளியேறுவதற்கு முன்பாக பிக் பாஸ் பலவித ஏவி களை டிவியில் போட்டு காட்டினார்.
அவர்கள் மகிழ்ச்சியாக இருந்த தருணம் சந்தோஷமாக சிரித்த தருணம் இறுதியாக அனைவரும் எமோஷனாக அழுத தருணத்தை டிவியில் போட்டு காட்டி அனைவரையும் அழ வைத்துவிட்டார். அதே தருணத்தில் அனைவரும் விடைபெற்று வெளியே வாருங்கள் என்று கூறியதால் அனைவரும் எமோஷனாகி அழுதார்கள்.
பின்னர் கார்டன் ஏரியாவில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் பாடலுக்கு நடனமாடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். அது பார்ப்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த சீசன் உண்மையிலேயே டாக்ஸிக் இல்லாத ஒரு நல்லதொரு சீசன் என்றே சொல்லலாம். அனைவரும் வெளியேறிய பின்னர் டாப் 5 போட்டியாளர்கள் உள்ளே பேசிக்கொண்டு வீட்டை சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தார்கள். ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டு இருந்தார்கள்.
இறுதியாக பிக் பாஸ் இன்னும் சிறிது நேரத்தில் லைவ் டெலிகாஸ்ட் நிறுத்தப்படும் அதற்கு முன்பாக நீங்கள் என்ன சொல்ல விரும்புறீங்க என்று கேட்டார். ஐந்து பேரும் எழுந்து இதுவரை எங்களுக்கு ஓட்டு போட்டு இந்த வீட்டில் இருக்க வைத்த மக்களுக்கு மிகவும் நன்றி எங்களை நம்பியதற்கு மிகவும் நன்றி. இந்த பிக்பாஸ் சீசன் எங்களை நாங்களே ஒரு புதிய பரிணாமத்தில் பார்ப்பதற்கு உதவியது. இதை நாங்கள் என்றைக்குமே மறக்க மாட்டோம் இந்த பயணம் எங்கள் வாழ்க்கையில் மிகவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று கூறினார்கள். உண்மையிலேயே லைவ் டெலிகாஸ்ட் நிறுத்தப்பட்டது பார்வையாளர்களுக்கு வருத்தமாக தான் இருந்தது. இனி அடுத்ததாக பினாலே இறுதி மேடைதான். முத்துக்குமரன் தான் ஜெயிப்பார் என அனைவரும் கூறி வருகிறார்கள் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.