தமிழ்சினிமாவில் பாரதியார் பாடல்கள்… அட இவ்ளோ படங்களா?

20ம் நூற்றாண்டில் புதுக்கவிதைகளை பாமர மக்களுக்கும் கொண்டு போய்ச் சேர்த்தவர் மகாகவி பாரதியார். இவர் தான் சுதந்திர வேட்கையை வளர்த்த முண்டாசுக்கவிஞர். என்று தணியும் இந்த சுதந்திர தாகம்னு பாடினார். ‘தண்ணீர் வீட்டோ வளர்த்தோம்…

bharathiyar

20ம் நூற்றாண்டில் புதுக்கவிதைகளை பாமர மக்களுக்கும் கொண்டு போய்ச் சேர்த்தவர் மகாகவி பாரதியார். இவர் தான் சுதந்திர வேட்கையை வளர்த்த முண்டாசுக்கவிஞர். என்று தணியும் இந்த சுதந்திர தாகம்னு பாடினார். ‘தண்ணீர் வீட்டோ வளர்த்தோம் சர்வேசா’ என வீர முழக்கம் இட்டவர் இவர்தான்.

சுதந்திரத்தை மட்டும் இல்லாமல் சாதிக்கொடுமை, தீண்டாமை போன்ற கடுமையான விஷயங்களுக்கும் தன் வீரியமிக்க கவிதை வரிகளால் சாட்டை அடி கொடுத்தார் பாரதியார். மக்களிடம் அடிமைத்தளையை அறுத்து எறியும் வகையில் விடுதலை வேட்கையைத் தன் கவிதை வரிகளால் தூண்டினார்.

புதுக்கவிதை என்ற பெயரில் இப்போது எல்லாம் எழுதுபவர்களுக்கும் ஆர்வம் ஊட்டியவர் இவரது கவிதைகளாகத்தான் இருக்கும். அது இருக்கட்டும். எல்லோருக்கும் இவரது கவிதைகள் என்றால் இஷ்டம்தான். அதில் சினிமா மட்டும் என்ன விதிவிலக்கா? எத்தனை படங்களில் அவரது பாடல்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று பாருங்கள்.

தமிழ்சினிமா உலகிலே பாரதியார் பாடல்களை முதன்முதலாகப் பயன்படுத்தியதுன்னா அது ஏவி.மெய்யப்பச் செட்டியார்தான். அவருடைய தயாரிப்பில் உருவான நாம் இருவர் படத்தில் தான் முதன் முதலாக பாரதியார் பாடல் ஒலித்தது. ஏவிஎம் நிறுவனத்தின் வேதாள உலகம், பெண், வாழ்க்கை, ஓர் இரவு, படிக்காத மேதை, கப்பலோட்டிய தமிழன், கை கொடுத்த தெய்வம், ஏழாவது மனிதன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மகாநதி, நீதிக்குத் தண்டனை, குற்றம் கடிதல் போன்ற படங்களிலும் பாரதியாரின் பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தப் படங்கள் நீங்கலாகப் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பாரதி படத்திலும் அவரது பாடல்கள் இடம்பெற்றுள்ளன.