பாரதிராஜா படத்தில் அறிமுகமாகி ஒரு நாட்டிற்கே பிரதமரான நடிகை.. ஒரு அழகான காதலும் உண்டு..!

By Bala Siva

Published:

இயக்குனர் இமயம் பாரதிராஜா திரைப்படத்தில் அறிமுகமாகி இன்று ஒரு நாட்டிற்கே பிரதமராக இருப்பதாக கூறப்படுவது யாரெனில் அந்த நடிகை தான் ரஞ்சிதா.

நடிகை ரஞ்சிதா ஆந்திராவைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே அவருக்கு நடிப்பில் ஆசை இருந்த காரணத்தால் அவர் தெலுங்கு படங்களில் நடிக்க முதலில் முயற்சித்தார். அவரது முயற்சிக்கு பலன் கிடைத்தது. இரண்டு தெலுங்கு படங்களில் அவர் இரண்டாவது நாயகியாக நடித்தாலும் அவை  வசூல் அளவில் வெற்றி பெறவில்லை.

‘முந்தானை முடிச்சு’ படத்திற்கு முன்பே 7 படங்கள் நடித்திருக்கிறாரா ஊர்வசி..?

ranjitha1

இந்த நிலையில் தான்  கார்த்திக் நடித்த ’நாடோடி தென்றல்’ என்ற திரைப்படத்தை இயக்க முடிவு செய்த பாரதிராஜா வாத்து மேய்க்கும் பெண் கேரக்டருக்கு ஒரு நடிகையை தேடிக் கொண்டிருந்தார். அவர் பல நடிகைகளை பரிசீலனை செய்த போது தான் ரஞ்சிதா நடித்த தெலுங்கு படத்தை பார்த்து இந்த பெண் சரியாக இருப்பார் என்று முடிவு செய்தார்.

இதனையடுத்து அவரிடம் கதை சொல்ல முதல் நாள் படப்பிடிப்பில் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறி பாரதிராஜாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். ஏனெனில் அந்த படம் முழுவதும் ஜாக்கெட் அணியாமல்  நடிக்க வேண்டும் என்பதுதான். ஆனால் கதையின் கேரக்டர் மற்றும் முக்கியத்துவத்தை அவருக்கு விளக்கிய பாரதிராஜா அந்த படத்தில் நடிக்க ஒப்புதல் பெற்றார்.

அந்த நேரத்தில் பிரபலமாக இருந்த கார்த்திக் ஜோடியாக நடிப்பது, பாரதிராஜாவின் இயக்கத்தில் நடிப்பது, இசைஞானி இளையராஜா இசையமைக்கும் படத்தில் நடிப்பது போன்றவை ரஞ்சிதாவை வெறும் சேலையில் மட்டும் நடிக்க ஒப்புக் கொள்ள வைத்தது. அந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் ரஞ்சிதாவுக்கு அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த நாள்: முதல் காட்சியிலேயே கொல்லப்படும் சிவாஜி.. பாடல்கள் இல்லாத ஒரு அற்புத துப்பறியும் படம்..!

குறிப்பாக ‘ஜெய்ஹிந்த்‘ படத்தில் மிக அபாரமாக நடித்திருப்பார். ‘கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்திருக்கு’ என்ற பாடல் இன்றும் பிரபலமாக உள்ளது. சரத்குமார் உடன் ‘கேப்டன்’ என்ற படத்தில், விஜயகாந்துடன் ‘பெரிய மருது’  மற்றும் ‘என் ஆசை மச்சான்’ படங்கள், சத்யராஜ் உடன் ‘அமைதிப்படை’, ‘தோழர் பாண்டியன்’ போன்ற படத்திலும் நடித்திருப்பார். குறிப்பாக ‘அமைதிப்படை’ படத்தில் அவரது நடிப்பு சூப்பராக இருக்கும்.

இந்த நிலையில் சினிமாவில்  பிஸியாக இருந்த ரஞ்சிதாவுக்கு ஒரு காதல் கதையும் உண்டு. அவர் ராணுவத்தில் வேலை செய்யும்  ராகேஷ் மேனன் என்பவரை காதலித்தார். கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் அவர்கள் காதலித்த நிலையில்  ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். கடந்த 2000 ஆண்டு ரஞ்சிதா – ராஜேஷ் மேனனுக்கு திருமணம் நடந்தது.

ஆனால் ஒன்பது வருடம் காதலித்த இந்த ஜோடி இரண்டே வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் அளித்த பேட்டியில் நானும் எனது கணவரும் ஒன்றாக தான் வாழ்ந்து வருகிறோம் என்றும் விவாகரத்து செய்து விட்டதாக கூறப்படுவது பொய்யான தகவல் என்று கூறினார். மேலும் தனது கணவரை பற்றி பெருமையாக கூறிய அவர் நான் பல நேரங்களில் கோபப்பட்டாலும் அவர் கோபப்படவே மாட்டார் என்றும் அவர் மிகவும் பொறுமையானவர், அவரைப்போல் ஒரு மனிதரை பார்க்க முடியாது என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தான் கடந்த 2010 ஆம் ஆண்டு டிவியில் ரஞ்சிதா மற்றும் நித்தியானந்தா ஆகியோர் இருக்கும் காட்சிகள் வெளியானது. அப்போதுதான் அவர் நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் சேர்ந்து சந்நியாசி ஆகிவிட்டார் என்பது பலருக்கு தெரிய வந்தது.

இந்த வீடியோ பொய்யானது என்றும் மார்பிங் செய்யப்பட்டது என்றும் நித்தியானந்தா மற்றும் ரஞ்சிதா இருவரும் கூறினாலும் தடயவியல் நிபுணர்கள் இந்த வீடியோவை ஆய்வு செய்து இந்த வீடியோவில் இருப்பது இருவரும் தான் என்பதை உறுதி செய்தனர். இந்த நிலையில் நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து வெளியேறாமல் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக இருந்தார் ரஞ்சிதா.

ranjitha4

ஒரு கட்டத்தில் நித்யானந்தா இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட போதுதான் அவர் திடீரென கைலாசா என்ற நாட்டுக்கு சென்று விட்டதாக கூறப்பட்டது. ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள ஒரு தீவை அவர் விலைக்கு வாங்கி கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளார் என்றும் அந்த நாட்டிற்கு அவர்தான் பிரதமராக இருந்தார் என்றும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது வந்திருக்கும் தகவலின் படி நித்தியானந்தாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் கைலாசா நாட்டின் பிரதமர் பொறுப்பை ரஞ்சிதா ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால்  கைலாசா என்ற நாடு இருப்பதாகவோ அதில் பிரதமர் பதவியில் ரஞ்சிதா இருப்பதாகவோ எந்தவிதமான உறுதி செய்யப்பட்ட செய்திகளும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கைலாசா என்பதை ஒரு கற்பனையான நாடு என்றும் நித்தியானந்தா தலைமறைவு வாழ்க்கைக்காக  பரப்பிய பொய்யான செய்தி என்றும் கூறப்படுவதுண்டு.

எம்ஜிஆர், சிவாஜிக்கு பிறகு வெற்றி பெற்ற ஒரே நடிகர் விஜயகாந்த்: 100வது பட பரிதாபங்கள்!

மொத்தத்தில் ரஞ்சிதா கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்திய ஒரு நடிகையாகவே பார்க்கப்படுகிறார்.