அந்த நாள்: சிவாஜி வில்லனாக நடித்த படம்.. பாடல்கள் இல்லாத ஒரு அற்புத துப்பறியும் படம்..!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ‘பராசக்தி’, ‘மனோகரா’ போன்ற படங்களின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை வைத்திருந்த நிலையில் படம் ஆரம்பித்து முதல் காட்சியிலே அவர் கொலை செய்யப்படும் வகையில் ஒரு படம் வெளியானது என்றால் அந்த படத்தை சிவாஜி ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? அவ்வாறு ஏற்றுக் கொள்ளாமல் தோல்வியடைந்த ஒரு படம்தான் அந்த நாள்.

1943ஆம் ஆண்டு  இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது சென்னையில்  எதிரி நாடுகள் குண்டு வீசியது. அதற்கு மறுநாள் காலை ராஜன் (சிவாஜி கணேசன்) என்ற ரேடியோ இன்ஜினியர் கொலை செய்யப்படுகிறார். போலீசார் இந்த கொலையை துப்பறிகின்றனர்.

எம்ஜிஆர், சிவாஜிக்கு பிறகு வெற்றி பெற்ற ஒரே நடிகர் விஜயகாந்த்: 100வது பட பரிதாபங்கள்!

andha naal

இந்த கொலையை ராஜனின் தம்பி பட்டாபி, தம்பி மனைவி, பக்கத்து வீட்டுக்காரர், ரகசிய காதலி மற்றும் தேசபக்தி மிகுந்த மனைவி ஆகிய ஐவரில் ஒருவர்தான் கொலை செய்திருப்பார்கள் என்று போலீசார் முடிவு செய்கிறார்கள். இந்த ஐவரில் யார் அந்த கொலையாளி என்பதை போலீசார் கண்டுபிடித்தார்களா? என்பதுதான் இந்த படத்தின் கிளைமாக்ஸ்.

முதல் காட்சியிலேயே சிவாஜி கணேசன் கொலை செய்யப்பட்டாலும், இந்த கொலையின் விசாரணையை ஒவ்வொருவரின் கோணத்தில் போலீசார் விசாரிக்கும் போது பிளாஷ்பேக் காட்சியில் சிவாஜி கணேசன் அந்த ஐவருடன் நடித்திருப்பார். இறுதியில் கொலை செய்தது யார் என்பதை  கிளைமாக்ஸில் பார்க்கும்போது ரசிகர்கள் அதிர்ந்து போவார்கள்.

சிவாஜிகணேசன் வில்லனாக நடித்த ஒரே படம் இதுதான். இந்த படத்தில் அவர் ஒரு ரகசிய உளவாளியாக, எதிரி நாட்டிற்கு நாட்டின் ரகசியத்தை விற்கும் ஒரு நபராக நடித்திருப்பார். அவரது செயலை கண்டுபிடித்த தேசபக்தி மிகுந்த அவரது மனைவி பண்டரி பாய்தான் கொலை செய்திருப்பார் என்பது ஆச்சரியத்தக்க ஒரு கிளைமாக்ஸாக இருக்கும்.

andha naal 3

எஸ்.பாலச்சந்தர் இந்த படத்தை அந்த காலத்திலேயே ஹாலிவுட் பாணியில் எடுத்து இருப்பார். 1943ஆம் ஆண்டில் சென்னை எப்படி இருந்ததோ அதை அப்படியே நம் கண்முன் நிறுத்திவிட்டு இருப்பார்.

கிளைமாக்ஸ்-க்கு முந்தைய 20 நிமிட காட்சியில் பண்டரி பாய் பேசும் தேசபக்தி வசனங்களுக்கு தியேட்டரில் கைதட்டல் பறக்கும். இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பல விருதுகளை வென்றாலும் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் வரவேற்பு பெறவில்லை. இந்த படம் தோல்வி படமாக அமைந்தது.

இந்த படம் விறுவிறுப்பான திரைக்கதை என்பதால் பாடல்கள் இருந்தால் படத்தின் விறுவிறுப்பு குறையும் என்பதால் இந்த படத்தில் பாடல்களே இல்லை. அதேபோல் நடனம், சண்டைக்காட்சி, காமெடி காட்சிகள் என்று எதுவுமே இல்லாமல் ஆரம்பம் முதல் இறுதி வரை படம் சஸ்பென்சாக சென்று கொண்டிருக்கும்.

இப்படி ஒரு படத்தை மிஸ் பண்ணிட்டோமே.. பிரபல நடிகர்கள் மிஸ் செய்த படங்கள்..!

பாடல்கள் இல்லாத காரணத்தினால்தான் இந்த படம் தோல்வி அடைந்தது என்று கூறினாலும் அந்த காலத்தில் ஹாலிவுட் பாணி துப்பறியும் கதை ரசிகர்களுக்கு புரியவில்லை என்பதும் ஒரு காரணமாக கூறப்பட்டது. ஆனால் 10 வருடம் கழித்து இந்த படத்தை பார்த்த பலரும் பாராட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

andha naal 2

சிவாஜி கணேசன் மிக அற்புதமாக நடித்திருப்பார். ஐந்து பேருடனும் அவர் மாறி மாறி பிளாஷ்பேக் காட்சியில் வரும்போது ஒவ்வொரு விதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். சிவாஜிக்கு இணையாக பண்டரி பாய் நடித்திருப்பார் என்பதும் ஆச்சரியமான ஒரு தகவல்.

சினிமான்னா இப்படித்தான் இருக்கணும்.. தமிழ் சினிமாவை புரட்டி போட்ட ‘16 வயதினிலே’

மொத்தத்தில் தமிழ் சினிமா ராஜா, ராணி கதைகள் மற்றும் புராண கதைகள் என்று மூழ்கியிருந்த நிலையில், அதில் இருந்து விலகி முதல் முதலாக ஒரு சமூக கருத்துக் கொண்ட தேசபக்தி படம் எடுக்கப்பட்டது என்பது தான் இந்த படத்தின் சாதனை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...