வட்ட வடிவ அழகி. கருப்பா இருந்தாலும் களையா இருந்த நடிகை தான் சரிதா. பாலசந்தர் இவரை மரோ சரித்ரா என்ற தெலுங்கு படத்தில் அறிமுகப்படுத்தினார். இவர் தன் குருநாதர் பாலசந்தர் பற்றி என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…
பாலசந்தர் என்னை அறிவு கெட்ட முட்டாள்னு தான் கூப்பிடுவார். அப்படி கூப்பிட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். இதைச் சொல்ல எனக்கு எந்த தயக்கமும் கிடையாது. அவரோட ஒரு படத்திலாவது நடிக்க மாட்டோமான்னு ஏங்கித் தவிக்கிறவங்க பலர் இருக்காங்க. ஆனா நான் 15 படங்கள்ல நடிச்சிருக்கேன். நடிப்புன்னா என்ன?
அதோட பரிமாணங்கள் என்ன? அப்படின்னு தெரிய பாலசந்தர் யுனிவர்சிட்டி தான் பெஸ்ட். அதைவிட வேற உயர்ந்த இடம் என்ன இருக்கு? பாலசந்தர் எனக்கு நிறைய அட்வைஸ் பண்ணினார். குறிப்பா வித்தியாசமான சேலஞ்சிங் ரோல் பார்த்து ஓகே பண்ணு. ஒரு படத்தோட ரோல் மாதிரி இன்னொரு படத்துல நடிக்கக்கூடாது. எந்த ஆர்டிஸ்ட் மாதிரியும் பண்ணாம கவனமா இருன்னு அடிக்கடி சொல்வார்.

அவர் முதல்ல எங்கிட்ட ஒரு சீனை சொல்லிட்டு யோசிக்கறதுக்கு டைம் கொடுப்பார். அந்த சீனை இப்படி செய்யலாமா… அப்படி பண்ணலாமான்னு 100 தடவை மனசுக்குள் சொல்லிப் பார்ப்பேன். அப்புறம் என்ன எப்படி பண்ணப்போறேன்னு கேட்பார். நான் நாலைந்து விதமா செய்து காட்டுவேன். பளிச்சுன்னு அவருக்குப் பிடிச்சிடும். அப்புறம் சில மாற்றங்கள் மட்டும் சொல்வார். இவளே ஒரு ஆர்டிஸ்டு தான். இவ சொல்லி நாம கேட்குறதான்னு எல்லாம் அவர் நினைக்கவே மாட்டார் என்கிறார் நடிகை சரிதா.