ஸ்வாசிகா தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடிக்கும் பிரபலமான நடிகை ஆவார். இவரது இயற்பெயர் பூஜா விஜய் என்பதாகும். மலையாள தொலைக்காட்சி தொடர்களிலும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி பிரபலமானவர் ஸ்வாசிகா.
2009 ஆம் ஆண்டு வைகை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஸ்வாசிகா. அதைத் தொடர்ந்து கோரிப்பாளையம், மைதானம், சாட்டை, அப்புச்சி கிராமம் ஆகிய திரைப்படங்களில் இரண்டாம் நடிகையாக நடித்து பிரபலமானவர் ஸ்வாசிகா. இது மட்டுமில்லாமல் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருக்கிறார். ஆனாலும் தமிழ் சினிமாவில் அவருக்கு சரியாக எந்த ஒரு கதாபாத்திரமும் அமையவில்லை.
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடித்த லப்பர் பந்து திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்வாசிகா நடித்திருப்பார். இந்த திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்று தந்தது. அதை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் ஸ்வாசிகா. அந்த வகையில் சூரி நடித்த மாமன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்வாசிகா நடித்துள்ளார். இந்த படம் அனைவரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகை ஸ்வாசிகாவை பற்றி பார்த்திபன் ஒரு நிகழ்ச்சியில் புகழ்ந்து பேசி இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், 13 வருடங்களுக்கு முன்பு ஸ்வாசிகா என்னிடம் ஆடிஷன் வந்தார். அப்போது நான் கண்டிப்பாக உங்களை நல்ல கதாபாத்திரத்திற்கு கூப்பிடுவேன் என்று கூறி அனுப்பினேன். இப்போது லப்பர் பந்து படத்தில் அவர் நடிப்பை பார்த்த பிறகு அவரை தேடி நான் வாழ்த்து கூறினேன். அப்போது அவர் என்னிடம் சார் என்னை ஞாபகம் இல்லையா நான் உங்களிடம் ஆடிஷன் வந்தேன் என்று அப்போது அவரை நான் பேச சொன்ன ஒரு வசனத்தை ஞாபகம் வைத்து கூறினார். இவ்வளவு ஒரு கான்ஃபிடன்டான பெண்ணா என்று நான் நினைத்தேன். ஏனென்றால் 13 வருடங்களாக மனம் தளராமல் சினிமாவில் போராடி நல்ல கதாபாத்திரம் அமையும் என்று காத்திருந்து இன்னைக்கு அதில் வெற்றி கண்டிருக்கிறார் நடிகை ஸ்வாசிகா என்று கூறியிருக்கிறார் பார்த்திபன்.