யாருமே வாங்க வராத அஜீத் படம்.. அதன் பின் நடந்த அதிசயம்.. அமர்க்களமான ஆரம்பம்!

தமிழ் திரையுலகின் அல்டிமேட் ஸ்டார் அஜீத் தனது சினிமா வாழ்க்கையில் எப்படி சாதித்தார் என்பது அனைவர்க்கும் தெரியும். எந்த வித சினிமா பின்புலமும் இல்லாமல், பிரபல நடிகர்களுடன் போட்டி போட்டு திரையுலகில் தனது திறமையை நிரூபித்தவர். ஆரம்ப காலகட்டங்களில் இவரது படங்கள் சரியாகப் போகவில்லை. அதன்பின் ஆசை படம் இவருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தது. தொடர்ச்சியாக வந்த காதல் கோட்டை தமிழ் திரையுலகில் அவரை காதல் மன்னனாக ஜொலிக்கச் செய்தது.

காதல் கோட்டை படத்திற்குப் பின் சில படங்களில் நடித்தவர் மீண்டும்சறுக்கலிலில் விழுந்தார். இதனையடுத்து இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தரின் உதவியாளராக இருந்த இயக்குனர் சரண் விவேக் மூலம் அஜீத்தை சந்தித்து அவருக்காக காதல் மன்னன் கதையைக் கூறியுள்ளார். அந்த நேரத்தில் அஜீத் நடித்த படங்கள் எதுவும் சரியாகப் போகாததால் அஜீத் கண்டிப்பாக எப்படியும் ஒரு வெற்றி கொடுக்க வேண்டும் என எண்ணி காதல் மன்னன் படத்தில் நடித்தார்.

வீட்டை அடகு வைத்து பாரதிராஜா எடுத்த படம்.. முதல் மரியாதை உருவாக காரணமான ரஷ்ய எழுத்தாளர்!

இந்த படத்திற்காக அதிகமாக செலவு செய்தனர். இருப்பினும் பட வேலைகள் அனைத்தும் முடிந்த பின்னர் ரிலீஸ் செய்வதில் தாமதம் ஆனது. விநியோகஸ்தர்கள் யாரும் படத்தை வாங்க முன் வரவில்லை. அப்போது அஜீத் ஒரு முடிவு எடுத்திருக்கிறார். காதல் மன்னன் ரிலீஸ்-ன் போதே தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பையும் வெளியிட்டார்.

இந்த படத்தையும் சரணே இயக்குவார் என் அறிவிக்கப்பட்டது. ஒரு வழியாக படம் விநியோகஸ்தர்கள் கையில் சென்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. படம் நன்றாக ஓடியது. இயக்குனர் சரண் அஜீத்தின் அடுத்த படத்திற்கான தலைப்பாக அமர்க்களம் என அறிவித்தார். ஆனால் அதுவரை கதை தயாராகவில்லை. அதன் பிறகே கதை எழுதினார். பின்னர் அஜீத் அமர்க்களம் படத்தில் நடித்தார். இந்தப் படம் அவரை ஆக்சன் ஹீரோவாக அவரை மாற்றியது. இந்த படத்திற்காக சம்பளம் வாங்காமலே நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி அஜீத்தின் திரையுலக வாழ்வு ஏற்ற இறக்கம் நிறைந்ததாகவே இருந்தும் மீண்டும் மீண்டும் பீனிக்ஸ் பறவையாக எழுந்து வெற்றி நடை போட்டு வருகிறார் ஏ.கே.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...