பாரதிராஜா டேஸ்ட்டுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தயாரானது எப்படி தெரியுமா? வெளிவந்த சீக்ரெட்

Published:

16 வயதினிலே படம் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே கிராமத்துப் பக்கம் அழைத்து வந்து வாய்க்காலில் தண்ணீர் போவது, பறவைகள் பறப்பது, கிழவிகள் சிரிப்பது, கோவணம் கட்டிக் கொண்டு ஏர் உழுவது, கோழிகள் தீவனம் தேடி ஓடுவது, பெட்டிக்கடைகள் என அனைத்தையும் காட்சிப்படுத்தி அதனைத் தரையில் மிளிரச் செய்தவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

பாரதிராஜாவின் கதை சொல்லும் பாங்கு, இயக்கும் திறமை ஆகியவை அவரின் படங்களை வெற்றிபெறச் செய்தாலும் அவருக்கு வலதுகரமாக இருந்தவர் இளையராஜா. இருவரும் ஒரே துருவங்களாய் 16 வயதினிலே படம் முதல் நாடோடித் தென்றல் படம் வரை பயணித்தனர். அதன்பின் இருவருக்கும் சில கருத்துவேறுபாடுகள் வர தனித்தனியே பிரிந்தனர்.

இதனையடுத்து வேறு சில இசையமைப்பாளர்களிடம் சென்ற பாரதிராஜாவுக்கு ஏனோ திருப்தி அளிக்கவில்லை. தனது ஒவ்வொரு படத்திலும் ஒரு இசையமைப்பாளரைப் பயன்படுத்தினார். அதன்பின் 1992-ல் ரோஜா படம் வெளியாகி சக்கைப் போடு போட்டுக் கொண்டிருந்தது. சின்னச் சின்ன ஆசை பாடல் உலகம் முழுக்க சென்றடைய அது பாரதிராஜாவின் காதுகளுக்கும் எட்டியிருக்கிறது.

உடனே தனது அடுத்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானை புக் செய்தார். அந்தப் படம்தான் கிழக்குச்சீமையிலே திரைப்படம். 1993-ல் வெளியான இப்படம் இன்னொரு பாசமலர், முள்ளும் மலரும் வரிசையில் சேர்ந்தது.

அன்றே 50 லட்சம் சம்பளம் கேட்ட கவுண்டமணி.. ஆடிப்போன ஏவிஎம்.. சைலண்டாக தட்டித் தூக்கிய வி.சேகர்

இப்படத்தில் வரும் பாடல்கள் கிராமிய இசையுடன் மேற்கத்திய இசையும் சேர்ந்து ரசிகர்களுக்குப் புது அனுபவத்தைக் கொடுத்தது. குறிப்பாக வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா.., மானூத்து மந்தையிலே போன்ற பாடல்கள் கிராமங்கள் தோறும் ஏ.ஆர்.ரஹ்மானைச் சென்றடைய வைத்தது. பாரதிராஜாவுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த படங்களில் கிழக்குச் சீமையிலே படமும் ஒன்று.

தான் இளையராஜாவிடம் என்ன எதிர்பார்த்தாரோ அதனை ஏ.ஆர்.ரஹ்மான் துளியும் பிசகாமல் அச்சு அசலாய் அப்படியே கொடுக்க அசந்து போயிருக்கிறார் பாரதிராஜா. இதுகுறித்து பாரதிராஜா ஏ.ஆர்.ரஹ்மானிடம் எப்படி கிராமிய இசை கைகூடியது என்று கேட்கையில் பாரதிராஜாவின் ஆரம்ப காலப் படங்கள் அனைத்தும் கவனித்து அவருக்கு என்னதேவையோ அதைவிட ஒருபடி மேலாகவே தனது இசையால் கொடுத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

அன்று தொடங்கிய இவர்களது காம்போ கருத்தம்மா, தாஜ்மஹால், கண்களால் கைது செய், அந்திமந்தாரை ஆகிய படங்கள் வரை தொடந்தது.

மேலும் உங்களுக்காக...