அன்றே 50 லட்சம் சம்பளம் கேட்ட கவுண்டமணி.. ஆடிப்போன ஏவிஎம்.. சைலண்டாக தட்டித் தூக்கிய வி.சேகர்

நக்கல் மன்னன் கவுண்டமணி இருந்தாலே அந்தப் படம் மினிமம் கியாரண்டி வெற்றிக்குச் சமம் என்பது எழுதப்படாத தமிழ்சினிமா விதியாக இருந்திருக்கிறது. கவுண்டமணி செந்தில் இருவரும் இணைந்து நடித்த படங்கள் எப்படி தயாரிப்பாளர்களுக்கு பெரிய லாபத்தைச் சம்பாதித்துக் கொடுத்ததோ அதேபோல் கவுண்டமணியும் தனியாக ஹீரோக்களுடன் சேர்ந்து காமெடி பண்ணும் காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

ஒருகட்டத்தில் ஹீரோக்களையே கவுண்டமணி அதிகமாகக் கலாய்க்கிறார் என எண்ணி ரஜினி, கமல் உள்ளிட்ட பெரிய ஹீரோக்கள் கவுண்டமணியை விடுத்து ஜனகராஜ், செந்தில் ஆகியோரைத் தங்கள் படங்களில் நடிக்க வைத்தனர். ஆனால் கவுண்டர் பிரபு, கார்த்திக், அர்ஜுன், சத்யராஜ் உள்ளிட்டோரிடம் இணைந்து நடித்து எப்பவுமே தான் காமெடி கிங் என்பதை நிரூபித்து வந்தார்.

இந்நிலையில் பட்ஜெட் படங்களை எடுத்து அதில் பெரிய லாபங்கள் பார்த்துக் கொண்டிருந்த வி.சேகர் படங்களில் கவுண்டமணி தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார். அப்படி கவுண்டமணி தனது இமேஜையும் பார்க்காமல் வெட்டியானாக நடித்து காமெடியில் கலக்கிய படம் தான் ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் திரைப்படம். சிவக்குமார் ஹீரோவாக நடித்த இப்படத்தில் வெட்டியானாக கவுண்டமணி காமெடியில் தனி ராஜ்ஜியமே நடத்தியிருப்பார். இந்தப்படத்திற்காக அப்போது அவர்பெற்ற சம்பளம் நாளொன்றுக்கு ரூ. 1லட்சம் முதல் 2 லட்சம் பெற்றுக் கொண்டிருந்தார்.

ஆண்பாவம் ஷுட்டிங்கில் சீதாவைக் கன்னத்தில் அறைந்த பாண்டியராஜன்.. காமெடி படத்தில் நடந்த முரட்டு சம்பவம்

இந்நிலையில் அவருக்கு எஜமான் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு வந்தது. ஏ.வி.எம்தயாரித்த இப்படத்தில் அவருக்கு எவ்வளவு சம்பளம் வேண்டும் எனக் கேட்க 50 லட்சம் கொடுங்கள் என்று குண்டைத் தூக்கிப் போட்டாராம். அதிர்ந்து போன ஏவிஎம் நிறுவனம் வி.சேகரை அழைத்து தற்போது உங்கள் படத்தில் என்ன சம்பளம் கொடுக்கிறீர்கள் என்று கேட்க அவரும் விபரத்தைக் கூறியிருக்கிறார்.

அப்போது கவுண்டமணி நீங்கள் பெரிய பேனர். படம் நல்ல வியாபாரம் ஆகும். அதனால்தான் இந்தச் சம்பளம். அதுவே என்னை நீங்கள் ஹீரோவாகப் போட்டு நடித்தால் தற்போதுள்ள சம்பளத்தையே வாங்கிக் கொள்கிறேன். ஆனால் வி.சேகர் படத்தில் நான்தான் ஹீரோமாதிரி என்று கூறியிருக்கிறார். எனவே தயாரிப்பு நிறுவனத்தைப் பொறுத்து சம்பளம் வாங்கி நடிப்பதில் கவுண்டமணி செம கில்லாடி என்று வி.சேகர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...