தமிழில் ஒளிபரப்பாகி வரும் எட்டாவது பிக் பாஸ் சீசன் சமீபத்தில் 75 வது நாட்களை கடந்து மிக அமர்க்களமாக சென்று கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் பூனையைப் போல பம்மியிருந்த போட்டியாளர்கள் அதிக விமர்சனத்தை பார்வையாளர்கள் மத்தியில் சந்தித்திருந்தனர். ஆனால் அப்படி இருந்த அனைவருமே தற்போது ஆட்டத்தை புரிந்து கொண்டு வேறு லெவலில் தங்களது திட்டங்களையும் வகுத்து வருவதால் ஒவ்வொரு நாளும் பிக் பாஸ் வீட்டில் ரணகளமாக தான் சென்று கொண்டிருக்கிறது.
மேலும் இந்த வார இறுதியில் இரண்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் அடுத்தடுத்து தங்களது இருப்பை காத்துக் கொள்வதற்காக எப்படி தங்களது யுக்திகளை வகுக்க வேண்டும் என்பதிலும் அனைத்து போட்டியாளர்கள் கவனமாக இருந்து வருகின்றனர். ஒரு பக்கம் பவித்ரா மற்றும் முத்துக்குமரன் ஆகியோருக்கு இடையேயான கேப்டன் சர்ச்சை பெரிய பிரச்சினையாக உருவாக இன்னொரு பக்கம் பிசிக்கல் டாஸ்கிலும் பல பிரச்சனைகள் நடந்தது அதிக விமர்சனத்தையும் சந்தித்திருந்தது.
அன்ஸிதாவின் அதிரடி
இப்படி ஒவ்வொரு நாள் முடிவிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி டாப் கியர் எடுத்துக் கொண்டிருக்க சமீபத்தில் ஜாக்குலின், மஞ்சரி மற்றும் ரயான் ஆகியோரை குறித்து அன்ஸிதா பேசிய சில கருத்துக்கள் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. “நான் முதலில் ஜாக்குலின் பெயரை தான் இந்த வாரத்தின் மோசமான போட்டியாளராக சொல்லுவேன். ஏனென்றால் தன்னுடைய தேவைக்காக இந்த வீட்டில் மற்றவர்களை எப்படி பகடைக்காயாக பயன்படுத்தலாம் என்பதை ஜாக்குலின் சரியாக தெரிந்து வைத்திருக்கிறார்.
மற்றவர்கள் மீது கை வைப்பதோ இல்லை லவ் என்று கூறுவதோ ஒரு கேம் தான். ஆனால் கேம் என்பதை தாண்டி என் மீது கை வைத்தது கேவலமாக இருந்தது. இதனால் ஜாக்குலின் தான் மோசமான பிளேயர். அடுத்ததாக ரயான் பெயரைச் சொல்வேன். அவருக்கு நாமினேஷன் ஃப்ரீ பாஸ் கிடைத்ததற்காக நான் ‘ஆடாம ஜெயிச்சோமடா’ என்ற பாடலை நான் அர்ப்பணிக்கிறேன்.
நீங்க Worst Player..
நீங்கள் உங்கள் மூளையை பயன்படுத்தி அதை வெல்லவில்லை. எதிர் அணியை வைத்து தான் நீங்கள் அதை ஜெயித்தீர்கள். இப்படி ஜாக்குலின் மற்றும் ரயான் ஆகிய இருவரை தொடர்ந்து மஞ்சரி பெயரையும் நான் கூற வேண்டும். இந்த வீட்டில் ஒரு பலமான போட்டியாளராக தான் என் மனதில் மஞ்சரி பெயரை வைத்திருந்தேன்.
ஆனால் கேம், டாஸ்க் என வரும் போது அதற்கேற்ப இருக்காமல் ஜாக்குலினின் காற்று இப்போது மஞ்சரி பக்கமும் அடிப்பதால் நிறைய பொய் கூற அவர் தொடங்கி விட்டார். இதனால் மஞ்சரியும் Worst Player தான்” என அன்ஸிதா ஒரே போடாக போட்டு விட்டார்.