இந்தியாவில் இரண்டு சிமெண்ட் கம்பெனிகளுக்கு ஓனராக இருக்கும் மிகப்பெரிய பணக்கார தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நடிகை ஒருவர் பின்னாளில் அஜித் படத்தின் தயாரிப்பாளராக மாறினார். யார் அந்த நடிகை என்ற கேள்விக்கு பதில் தான் பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா.
நடிகை ஜூஹி சாவ்லா ஹரியானாவை சேர்ந்த மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்தார். அவர் தனது 17வது வயதில் இந்திய அழகி போட்டியில் வெற்றி பெற்றார். இதன் பிறகு அவருக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் குவிந்தது. அவர் நடித்த பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது.

முன்னணி நடிகர்கள் இணைந்த ஒரே படம்….. ஹிட் அடிக்காமல் போனதே…..!!
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அமீர்கான், ஷாருக்கான் உள்பட பலருடன் நடித்தார். அவர் அமீர்கானுடன் நடித்த படமான குயாமத் செ குயாமத் டக் என்ற படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படம் இந்தியாவில் மட்டும் இன்றி சீனா உள்பட பல நாடுகளிலும் வெற்றி பெற்றது. பாலிவுட் படங்களில் மட்டுமின்றி சில தென்னிந்திய படங்களிலும் ஜூஹி செளலா நடித்துள்ளார்.
நடிகை ஜூஹி சாவ்லா, பிரபல கன்னட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் வி ரவிச்சந்திரன் ஜோடியாக பிரேமலோகா என்ற கன்னட படத்தில் நடித்தார். இந்த படம் அவருடைய இரண்டாவது படம். இந்த படம் தான் தமிழில் பருவராகம் என்ற பெயரில் ரீமேக் ஆகி சக்கைபோடு போட்டது. அதேபோல் ரஜினிகாந்த் நடித்த நாட்டுக்கு ஒரு நல்லவன் திரைப்படத்திலும் ஜூஹி சாவ்லா நடித்தார். இந்த படத்தில் ரவிச்சந்திரன், குஷ்பூ ஆகியோர்களும் நடித்திருந்தனர்.
தொடர்ச்சியாக பல வெற்றி படங்களில் நடித்து பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகையாக இருந்த ஜூஹி சாவ்லா கடந்த 1995ஆம் ஆண்டு ஜெய் மேத்தா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். ஜெய் மேத்தா அவர்களுக்கு சொந்தமாக இரண்டு சிமெண்ட் ஆலைகள் உள்ளன. இவருடைய சொத்து மதிப்பு நூற்றுக்கணக்கான கோடி என்று கூறப்படுகிறது.

பிரபல நடிகருடன் நடிக்க மறுத்த நடிகை சில்க் ஸ்மிதா… அவர் அப்ப சொன்ன காரணம் தான் ஹைலைட்டே…
ஆனால் ஜெய் மேதா ஏற்கனவே சுஜாதா என்ற என்பவரை திருமணம் செய்து இருந்தார். சுஜாதா கடந்த 1990 ஆம் ஆண்டு நடந்த விமான விபத்தில் காலமானதை அடுத்து ஜூஹி சாவ்லாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்
நடிகை ஜூஹி சாவ்லா, ஷாருக்கான் உடன் இணைந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராகவும் உள்ளார். திரைப்படங்களில் மட்டுமின்றி நடிகை ஜூஹி சாவ்லா தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும் இருந்தவர். ஃபிலிம்பேர் விருதுகள் உள்பட பல விருதுகள் வழங்கும் விழாவை தொகுத்து வழங்கியுள்ளார். அதேபோல் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலும் அவர் நடுவராக இருந்து உள்ளார்.

முன்னணி நடிகர்கள் இணைந்த ஒரே படம்….. ஹிட் அடிக்காமல் போனதே…..!!
நடிகை ஜூஹி சாவ்லா திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இருந்து உள்ளார். அவர் ஷாருக்கான் மற்றும் அஜித் நடித்த அசோகா என்ற படத்தை தயாரித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது. அசோகா படம் மட்டுமின்றி மேலும் 2 ஷாருக்கான் படங்களையும் ஜூஹி சாவ்லா தயாரித்து உள்ளார். தற்போது 55 வயது ஆனாலும் ஜூஹி சாவ்லா பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஃப்ரைடே நைட் பிளான் என்ற படத்தில் தற்போது அவர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
