கீழே விழுந்தும் எழுந்திருக்காத அஜித்.. அவருக்கு என்ன ஆச்சு? பதட்டமான பட குழு.. கேஎஸ் ரவிக்குமார் பகிர்ந்த நிகழ்வு..!!

By Aadhi Devan

Published:

1992 ஆம் வருடம் பிரேம புத்தகம் என்ற தெலுங்கு திரைப்படம் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் அஜித் குமார். 1993 ஆம் வருடத்தில் தமிழில் அமராவதி என்ற படத்தில் அறிமுகமானார். அன்று முதல் துணிவு வரை பல படங்களில் அஜித் குமார் நடித்துள்ளார்.

பருத்திவீரனில் அறிமுகமான கார்த்தி.. சிவகுமாரின் மகன் என்று பார்க்க மாட்டேன்.. உறுதியாக சொன்ன அமீர்..!!

அதோடு அல்டிமேட் ஸ்டார் ஏகே என்று அவருக்கு தனி ரசிகர் பட்டாளுமே உள்ளது. ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் அஜித் திரை உலகில் பல சோதனைகளை பார்த்துள்ளார். தமிழில் முதல் படமான அமராவதி அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

அதேபோன்று அடுத்தடுத்து நடித்த ராஜாவின் பார்வையிலே, பாசமலர்கள் போன்ற படங்களும் அவருக்கு தோல்வியை தான் கொடுத்தன. இப்படி பல தோல்வி படங்களையும் அஜித் சந்தித்துள்ளார். ஆனால் இப்போது அஜித்குமார் பிரபல நடிகராக உச்சத்தில் இருக்கிறார்.

அவர் பல வெற்றி படங்களை கொடுத்த பிறகும் நடிப்பில் அவருக்கு இருந்த ஈடுபாடு என்பது பாராட்டும் விதமாகவே இருந்துள்ளது. இது குறித்து கே எஸ் ரவிக்குமார் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த திரைப்படம் வரலாறு.

ஷூட்டிங்கில் ரஜினி பண்ண தப்பு.. செருப்பால அடிப்பேன்னு திட்டிய பாலச்சந்தர்.. சூப்பர் ஸ்டார் பகிர்ந்த தகவல்..!!

இந்த படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின் போது அஜித் படக்குழுவினரையே ஒரு நொடியில் பதற வைத்துள்ளார். மேல இருந்து அஜித் கீழே விழுவது போன்று ஒரு காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அப்போது கனல் கண்ணன் கீழே தெர்மாகோல் போன்றவற்றையெல்லாம் வைத்து விட்டார்.

சரியாக அஜித்தும் மேலே இருந்து அடி வாங்கி கீழே வந்து விழுவார். ஆனால் விழுந்தவர் அதன் பிறகு வெகு நேரம் ஆகியும் எழுந்திருக்காமல் இருந்துள்ளார். இதனால் படகுழுவுக்கு பதட்டம் அதிகமாகி உள்ளது. ஏற்கனவே அஜித்தின் முதுகில் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதால் கேஎஸ் ரவிக்குமார் பதற்றுத்துடன் வந்து பார்த்துள்ளார்.

அப்போது அஜித் பயமில்லாமல் தனது போனை மட்டும் கேட்டுள்ளார். போனையும் கொடுக்க அவரது மருத்துவருக்கு அழைத்து நடந்தவற்றை கூறியுள்ளார். உடனே மருத்துவர் ஐஸ் பேக் வைத்து விட்டு மெதுவாக எழுந்திருக்க பாருங்கள் முடியவில்லை என்றால் ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு வந்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.

தலைவர் 171 படத்தில் வில்லன் ஆகும் ஹிந்தி நடிகர்! அமீர் கானா- சல்மான் கானா ?

அஜித்தும் ஐஸ் பேக்கை கழுத்துடன் சேர்த்து சிறிது நேரம் வைத்து விட்டு அதன் பிறகு மெதுவாக எழுந்திருத்தவர் அடுத்த ஷாட்டுக்கு தயார் என்று கூறி விட்டாராம். தனது உடல் நிலையை நன்றாக புரிந்து வைத்ததால் தான் அடிபட்டவுடன் சட்டென்று எழுந்தால் ஏதேனும் ஆகிவிடலாம் என்று மருத்துவரின் ஆலோசனை பெற்று அஜித் அடுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். ஆனால் இந்த சம்பவம் பட குழுவினரை சில நிமிடங்களில் பதட்டப்படுத்தி விட்டது என்று கே எஸ் ரவிக்குமார் பகிர்ந்துள்ளார்.

மேலும் உங்களுக்காக...