தலைவர் 171 படத்தில் வில்லன் ஆகும் ஹிந்தி நடிகர்! அமீர் கானா- சல்மான் கானா ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் லியோ. லோகேஷ் மற்றும் தளபதி விஜய் கூட்டணியில் இரண்டாவது முறையாக வெளியான லியோ திரைப்படம் உலக அளவில் 650 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்தது. அதை தொடர்ந்து தளபதி விஜய் தனது 68 வது படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். அதை போல் லோகேஷ் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினி உடன் இணைந்து தலைவர் 171 திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தலைவர் 171 படத்தின் முழு கதை உருவாக்கத்தில் தற்பொழுது லோகேஷ் ஈடுபட்டு வருகிறார். அதற்காக சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருப்பதாகவும், படத்தில் கதையின் மீது அதிகம் கவனம் செலுத்த உள்ளதாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் லியோ திரைப்படத்தில் ஏற்பட்ட சில எதிர்மறையான விமர்சனங்களை கருத்தில் கொண்டு ரஜினி படத்தில் முழு கவனத்துடன் இயக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இந்த மாத இறுதிக்குள் படத்தின் மொத்த படப்பிடிப்புகளும் முடிய இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்தவுடன் ரஜினி இரண்டு மூன்று மாதங்கள் ஓய்வு எடுக்க இருப்பதாகவும் அதன் பின் தலைவர் 171 படத்தில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் தலைவர் 171 படத்தின் படப்பிடிப்புகள் ஏப்ரல் மாதம் துவங்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும், இளம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும் அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகிறது.

மேலும் தலைவர் 171 திரைப்படம் மற்ற ரஜினி படங்களை போல இல்லாமல் ரஜினியின் வில்லத்தனத்தை அதிகமாக காட்ட இருப்பதாகவும், அதிரடியான காட்சிகளுடன் படம் உருவாக இருப்பதாகவும் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். பொதுவாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களில் ஹீரோக்களுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரம் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும். உதாரணமாக தளபதி விஜய் நடிப்பில் உருவாகிய மாஸ்டர் திரைப்படத்தில் ஹீரோ விஜய் சேதுபதி வில்லனாக களமிறங்கி கலக்கி இருப்பார். பவானி என்னும் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி கச்சிதமாக நடித்து விஜயின் ஹீரோயிசத்திற்கு போட்டி போடும் இடத்தில் கலக்கி இருப்பார்.

அதைத்தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருப்பார். மேலும் அந்த படத்தில் இறுதி கட்ட காட்சிகளில் ஹீரோ சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் வந்து ரசிகர்களை மிரள வைத்திருப்பார். பொதுவாக லோகேஷின் திரைப்படங்களின் வில்லன் கதாபாத்திரத்தில் பெரும்பாலும் சூப்பர் மாஸ் ஹீரோக்களை நடித்து வந்துள்ளனர். அதுவே அந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாகவும் அமைந்திருக்கும். அந்த வகையில் லோகேஷ் தற்பொழுது இயக்க இருக்கும் தலைவர் 171 திரைப்படத்தில் வில்லனாக யார் நடிக்கிறார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

தளபதி 68 படத்தில் விஜய்க்கு தங்கச்சியாகும் வாய்ப்பை தவறவிட்ட இவ்வானா! தட்டிப்பறித்த சுந்தர் சி பட ஹீரோயின்!

அந்த வகையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஹிந்தி நடிகர் ஷாருக்கான் இடம் லோகேஷ் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதற்கு ஷாருக்கான் அவர்கள் முற்றிலும் மறுத்துள்ளார். மேலும் இதுபோன்ற வில்லன் கதாபாத்திரம் சிறப்பு தோற்றங்களில் நடிப்பதை தன் ரசிகர்களை விரும்பவில்லை என்றும் காரணமும் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அமீர் கான் மற்றும் சல்மான் கான் போன்ற முன்னணி பாலிவுட் நடிகர்களிடம் லோகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தலைவர் 171 படத்தில் கண்டிப்பாக ஒரு பாலிவுட் ஹீரோ வில்லனாக நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.