இரட்டை வேடத்தில் கலக்க வரும் அஜித்! தல மாஸ் அப்டேட் இதோ!

Published:

அஜித்தின் AK 62 படத்திற்கான அறிவிப்பு எப்போது வரும் என காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு அவரது பிறந்தநாளை முன்னிட்டு விடாமுயற்சி என்ற தலைப்புடன் படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதை தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு குறித்து ரசிகர்கள் ஆவலாக இருந்து வருகின்றனர்.

அஜித் அவர்கள் உலக சுற்றுலாவை முடிப்பதற்கு முன்பாகவே விடா முயற்சி படத்திற்காக தயாராகி வருகிறார் என்றும் அவ்வப்போது அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி டிரெண்ட் ஆகி வருகிறது. அந்த வகையில் விடாமுயற்சி படத்திற்காக முதற்கட்டமாக அஜித் ஹேர்கட் செய்துள்ளார். இப்போது தலையில் கலர் அடிக்கலாமா அல்லது வெள்ளை முடியுடன் வேறு ஏதாவது கெட்டப் போடலாமா என யோசனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் துணிவு படத்தில் அவருடைய கெட் அப் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. அதேபோல் புதிய கெட் அப் ஒன்றை விடாமுயற்சி படத்திற்கு போடலாம் என்று அஜித் மகிழ் திருமேனியிடம் கூறியுள்ளார். அதுவும் விடாமுயற்சி படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம்.

பல வருடங்கள் கழித்து வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அதனால் நடிப்பிலும் வித்தியாசமாக தெரிய வேண்டும் கெட் அப்பிலும் வித்தியாசமாக தெரிய வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்கவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித் 13 வருடங்களுக்கு பிறகு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார் என சினிமா வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளன. வாலி, வில்லன், வரலாறு, சிட்டிசன், அட்டகாசம் பில்லா, அசல் ஆகிய படங்களில் இரட்டை மற்றும் மூன்று வேடங்களில் நடித்துள்ளார்.

2010 ஆன் ஆண்டு வெளிவந்த அசல் படத்தில் தான் கடைசியாக அஜித் இரட்டை வேடத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. அதனால் இதுவரை செய்யாதா ஒன்றை செய்ய வேண்டும் என்று ஆலோசனை கேட்டுள்ளார் அஜித்.

விக்ரம் படத்தில் ரோலக்ஸ்… அப்போ லியோ படத்தில் யாரு தெரியுமா? தெறிக்க விடும் அப்டேட்!

அதற்கு மகிழ் திருமேனியும் எதிர்பார்க்காத விஷயத்தை செய்யலாம் என்றும் வாக்குறுதி கொடுத்துள்ளார். விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு கால தாமதம் ஆனதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு சற்று குறைந்துள்ளது. அதனால் விடாமுயற்சியுடன் அஜித் தனது படத்தில் கவனம் செலுத்த உள்ளார்.

இந்நிலையில் மிக விரைவில் விடா முயற்சி படத்தில் அஜித்தின் கெட் அப் புகைப்படம் வெளியாக இருக்கிறது அதன் மூலம் இந்த படத்தின் எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் அதிகரிக்க செய்ய வேண்டும் என்ற முயற்சியில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

மேலும் உங்களுக்காக...