விக்ரம் படத்தில் ரோலக்ஸ்… அப்போ லியோ படத்தில் யாரு தெரியுமா? தெறிக்க விடும் அப்டேட்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்பொழுது விஜய் அவர்கள் நடிப்பில் லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்பொழுது காஸ்மீரில் நடந்து வருகிறது. மேலும் இந்த படத்தில் திரிஷா ஹீரோயினாக நடித்து வருகிறார்.

லோகேஷ்- விஜய் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் என்பதால் ரசிகர்கள் மத்தில் ஆவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் லோகேஷின் முந்தைய படமான விக்ரமில் ரோலக்ஸ் என்ற கெஸ்ட் ரோலில் மிரட்டி இருந்தார் சூர்யா. அந்த படத்துக்கான ஹைப்பை அவரின் இந்த கேரக்டர் பலமடங்கு எகிற செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது லியோவிலும் அதேபோல் ஒரு கேரக்டர் இடம் பெற்றிருப்பதாக தகவல் வெளியானது. அதன்படி பிப்ரவரியில் ‘லியோ – ப்ளடி ஸ்வீட்’ ப்ரோமோ வெளியானபோது, ​​​​அப்போது மெகா பவர்ஸ்டார் ராம் சரண் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

ஆனால் இது குறித்து லோகேஷ் கனகராஜ் இதுவரை எந்த கருத்துக்களும் வெளியிடவில்லை. இந்நிலையில் படத்தில் யார் அந்த முக்கியமான ரோல் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

விஜய்யின் லியோ பட வாய்ப்பை தவற விட்ட உதயநிதி! இதுவும் போச்சா….

சமீபத்திய லேட்டஸ்ட் தகவலாக பாலிவுட் பிரபலம் அனுராக் காஷ்யப் லியோ படத்தில் நடிக்க உள்ளதாகவும், ரோலக்ஸ் அளவிற்கு இந்த படத்திலும் அவரின் கேரக்டர் வெயிட் ஆக இருக்கும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

அனுராக் காஷ்யப் ஒரு பேட்டியில் தான் லோகேஷ் கனகராஜின் மிகப்பெரிய ரசிகர் என்றும் அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் எவ்வளவு சின்ன கதாப்பாத்திரமாக இருந்தாலும் நடிப்பதாக கூறினார். படத்தின் அப்டேட்களுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...